பொது செய்தி

இந்தியா

அதிக தடுப்பூசி செலுத்திய டாப் 10 மாநிலங்கள்: தமிழகத்துக்கு இடமில்லை!

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (52)
Share
Advertisement
புதுடில்லி: அதிக கொரோனா தடுப்பூசிகள் செலுத்திய டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. ஆனால், அதிக பாதிப்படைந்த மாநிலங்கள் வரிசையில் 5ம் இடம் பிடித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றில் இருந்து நம்மை காப்பாற்றும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என, மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தற்சமயம்

புதுடில்லி: அதிக கொரோனா தடுப்பூசிகள் செலுத்திய டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை. ஆனால், அதிக பாதிப்படைந்த மாநிலங்கள் வரிசையில் 5ம் இடம் பிடித்துள்ளது.



latest tamil news


கொரோனா பெருந்தொற்றில் இருந்து நம்மை காப்பாற்றும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என, மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தற்சமயம் பயன்பாட்டில் உள்ளது. இன்றைய (மே 13) நிலவரப்படி 13.76 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 4 கோடி பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் பெற்று முழு பாதுகாப்புடன் உள்ளனர்.

இந்த 13.76 கோடி பேரில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை 40.3%. 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் எண்ணிக்கை 45.6%. 30 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் எண்ணிக்கை 9.2% ஆக உள்ளது. இது தவிர 18 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 4.9% பேரும் இதில் அடக்கம். 66.73% தடுப்பூசிகள் பத்து மாநிலங்களின் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.


latest tamil news


தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மஹா., மாநிலம் தான், தடுப்பூசி போடுவதிலும் முதலிடத்தில் உள்ளது. அங்கு 1.8 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த எண்ணிக்கையில் 10.7% ஆகும். 1.46 கோடி தடுப்பூசி போட்டு 2ம் இடத்தில் ராஜஸ்தான், 1.45 கோடி தடுப்பூசிகள் வழங்கி மூன்றாம் இடத்தில் குஜராத்தும் உள்ளன. மேலும் உ.பி., மே.வங்கம், கர்நாடகா, ம.பி., பீகார், கேரளா, ஆந்திரா ஆகியவை வரிசையாக டாப் 10ல் இடம்பெற்றுள்ளன.

மருத்துவ கட்டமைப்பில் சிறந்து விளங்குவதாக கூறப்படும் தமிழகம் இந்த டாப் 10 பட்டியலில் இடம்பிடிக்கவில்லை. ஆனால் தமிழகம் மற்றொரு டாப் 10 பட்டியலில் 5ம் இடம் பிடித்துள்ளது. அது அதிக பாதிப்பு கொண்ட மாநிலங்கள் பட்டியல் ஆகும். 'தடுப்பூசி பற்றி பரப்பப்பட்ட வதந்திகள் தான் தமிழகத்தின் இந்நிலைக்கு காரணம்' என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம், தமிழகம் ,இந்தியா
14-மே-202112:02:35 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா 18 முதல் 44 வயதுடைவர்களுக்கு இன்னும் தமிழகத்தில் தடுப்பூசி போட அனுமதிக்கவில்லை. திமுக ஆட்சியில் இருந்தால் தமிழர்கள் கொத்துக்கொத்தாக சாக வேண்டும் என்பது தான் திராவிட கொள்கை.
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
14-மே-202111:40:06 IST Report Abuse
Dr. Suriya பழனி இருந்திருந்தால் முதலில் வந்து இருக்கும்... திறமை இல்லாத.. அறிவில்லாத ஆனா விஞ்ஞானி குடும்பம் (எதுலன்னு உங்களுக்கே தெரியும்) தானே இப்போ இருக்கு... அப்புறம் எப்படி முதலிடத்தில் வரும்...
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
14-மே-202110:52:54 IST Report Abuse
sankar இங்கதான் தடுப்பூசியை எதிர்த்து பிரச்சாரமே நடந்ததே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X