பொது செய்தி

இந்தியா

கொரோனா காலத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் கடத்தல்

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனை அடுத்து முக்கிய நகரங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. பல மாநிலங்களில் மாநில அரசுகள் ஊரடங்கு அமல் படுத்தி வருகின்றன. ஊரடங்கினால் அதிகமாக பாதிக்கப்படுவது அன்றாட வேலை செய்யும் கூலித் தொழிலாளிகள்தான். வசிப்பிடம் இல்லாமல் சாலைகளில் படுத்து உறங்கும் இவர்களது
Child, Trafficking, Suspected, Behind Pleas, Adoption, Covid, Orphans, குழந்தைகள், கடத்தல், கொரோனா

புதுடில்லி: இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனை அடுத்து முக்கிய நகரங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. பல மாநிலங்களில் மாநில அரசுகள் ஊரடங்கு அமல் படுத்தி வருகின்றன. ஊரடங்கினால் அதிகமாக பாதிக்கப்படுவது அன்றாட வேலை செய்யும் கூலித் தொழிலாளிகள்தான். வசிப்பிடம் இல்லாமல் சாலைகளில் படுத்து உறங்கும் இவர்களது வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இவர்களது சிறுவயது குழந்தைகள் பாதுகாப்பு தற்போது கேள்விக்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் குற்றச் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றுவரும் நிலையில் தற்போது வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி கயவர்கள் பலர் குழந்தைகளை கடத்தி வருகின்றனர்.


latest tamil news


இந்த தகவல் காவல்துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழை குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை ஆகிய இருவரும் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் ஆதரவற்று தெருவில் விடப்படும் குழந்தைகள் அதிகமாக கடத்தலுக்கு உள்ளாகின்றனர். இவ்வாறு முக்கிய நகரங்களில் ஆதரவற்ற இருக்கும் குழந்தைகளை கடத்த பல கும்பல்கள் தற்போது மும்முரம் காட்டி வருகின்றன. இதுபோன்ற குழந்தை கடத்தல் கும்பல்களை கைது செய்ய அந்தந்த மாநில காவல் உயர் அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
14-மே-202107:55:29 IST Report Abuse
siriyaar இனி தமிழகத்தில் மதமாற்றம் செய்ய மிஷனரிகள் இந்த வழிமுறையை தொடங்க அவர்கள் காலம் மீண்டும் பிறந்துவிட்டது. குழந்தைகளை பத்திரமாக பார்த்தகொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கடத்தியபோய் மதம் மாற்றம் செய்வார்கள்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
14-மே-202103:54:17 IST Report Abuse
M  Ramachandran இது அரசின் சரியான அணுகு முறையற்றது. நோயாளிகளை அழைத்து செல்லும்போது அவர்கள் குடும்பம் பற்றி கேட்க வேண்டியது தானே? அந்த ஊழியர்கள் அந்த எண்ணம் ஏற்படாமல் போணதுஎப்படி?
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
14-மே-202103:51:54 IST Report Abuse
M  Ramachandran இப்போ கேட்க வேண்டியது தானே ராவுளு கேஜ்ரிவால் எங்கெங் என்று? நீ கேட்க மாட்ட்டாய் . உள்குத்துஆகிவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X