பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்ஸிஜன் உற்பத்திக்கு சிறப்பு சலுகை: தமிழக அரசு

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன்உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில், கொரோனா நோயாளிகளுக்கு அவசியமான ஆக்சிஜன் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழகம் தற்சார்பு
ஆக்ஸிஜன் உற்பத்தி, தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன்உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில், கொரோனா நோயாளிகளுக்கு அவசியமான ஆக்சிஜன் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழகம் தற்சார்பு அடைவதற்கான வழிமுறைகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார். ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு சிறப்பு சலுகைகளை அறிவித்து உள்ளது.


latest tamil news




இதன்படி

1. ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, ஆக்சிஜன் உருளை மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழகத்தில் முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30 சதவீத மூலதன மானியம், இரண்டு சம ஆண்டு தவணைகளில் வழங்கப்படும். இந்த சலுகையை பெறுவதற்கு தொடர்புடைய நிறுவனங்கள் 2021 ஆக்.15க்குள் உற்பத்தியை துவங்க வேண்டும். 2021 ஜன.,1 முதல் ஆக்.,31 வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு இதற்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

2. குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 10 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட பெரிய நீர்ம ஆக்சிஜன், உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்க 2021 ஜன.,1 முதல் 2021 நவ.,30 வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு 30 சதவீத மூலதன மானியம் 5 ஆண்டுகளில் வழங்கப்படும். இந்த சலுகையை பெறுவதற்கு நிறுவனங்கள் நவ.,30க்கு முன்னர் உற்பத்தியை துவங்க வேண்டும

3. அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி மானியத்துடன் உடனடியாக கடன் வழங்கப்படும்.

4. அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிப்காட்/சிட்கோ நிறுவனங்கள் மூலம் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும்

5. அத்தகைய முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் மூலம் கட்டணம் ஏதுமின்றி ஒற்றை சாளர முறையில் விரைந்து அனுமதி வழங்கப்படும்.

6. கொரோனா தொடர்பான மருத்துவ பொருட்களான ஆக்சிஜன் செறிவு, தடுப்பூசிகள், ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் புதிய நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் துணை புரியும். இந்த சிறப்பு தொகுப்பு சலுகைகள் தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணஙகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் முதலீடுகளுக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
14-மே-202107:50:42 IST Report Abuse
வெகுளி எங்கள் தமிழகம், எங்கள் முதல்வர், எங்கள் துன்பம்....
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
14-மே-202101:50:51 IST Report Abuse
Elango குறுகிய கால பலன்கள் இருக்குமா ??? உடனடியாக ஆக்சிஜன் தயாரிக்க முடியுமா
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
13-மே-202123:28:28 IST Report Abuse
unmaitamil முதலில், சுடலையின் குடும்பம் மற்றும் திமுக கட்சி தலைவர்கள் நடத்தும் சாராய ஆலைகளில், சாராயம் காச்சுவதை சிறிதுகாலம் நிறுத்திவிட்டு ஆக்சிஜென் தயாரித்தால், நாள் ஒன்றுக்கு ஐநூறு டன் ஆக்சிஜென் தயாரிக்கலாம். தமிழ்நாடு தன்னிறைவு பெரும். தூத்துக்குடி ஸ்டரிலேட்டு ஆலயவும் திறக்கவேண்டாம். செய்வார்களா தீய சக்திகள் ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X