பொது செய்தி

இந்தியா

நீதிமன்ற செய்தி சேகரிக்க புதிய 'ஆப்' அறிமுகம்

Added : மே 13, 2021
Share
Advertisement
புதுடில்லி:உச்ச நீதிமன்றத்தில் 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடக்கும் வழக்குகளின் விசாரணை தொடர்பான செய்திகளை சேகரிக்க, பத்திரிகையாளர்களுக்கென 'மொபைல் ஆப்' எனப்படும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் உள்ளதால் அனைத்து நீதிமன்றங்களிலும் வீடியோ கான்பரன்ஸ் முறையிலேயே விசாரணை நடந்து வருகிறது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்கில் தொடர்புடையோர்
 நீதிமன்ற செய்தி சேகரிக்க புதிய 'ஆப்' அறிமுகம்

புதுடில்லி:உச்ச நீதிமன்றத்தில் 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடக்கும் வழக்குகளின் விசாரணை தொடர்பான செய்திகளை சேகரிக்க, பத்திரிகையாளர்களுக்கென 'மொபைல் ஆப்' எனப்படும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் உள்ளதால் அனைத்து நீதிமன்றங்களிலும் வீடியோ கான்பரன்ஸ் முறையிலேயே விசாரணை நடந்து வருகிறது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்கில் தொடர்புடையோர் மட்டுமே பங்கேற்க முடியும். அதனால் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்குகள் விசாரணையை பத்திரிகையாளர்களும் பார்க்கும் வகையில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அதை அறிமுகம் செய்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறியதாவது:உச்ச நீதிமன்ற விசாரணையை நேரடியாக ஒளிபரப்புவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.

மற்ற நீதிபதிகளுடன் ஆலோசித்து இதில் முடிவு செய்யப்படும்.நானும் சிறிது காலம் பத்திரிகை நிருபராக பணியாற்றியுள்ளேன். அதனால் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளை அறிவேன். இதையடுத்தே இந்த செயலி அறிமுகம் செய்யப் படுகிறது. இதை சரியான முறையில், பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


106 நீதிபதிகளுக்கு கொரோனா




தலைமை நீதிபதி, என்.வி. ரமணா மேலும் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளது. அதனால் பத்திரிகையாளர்கள் தங்கள் பணியில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.நீதித் துறையில் மட்டும் 2,768 அதிகாரிகள், உயர் நீதிமன்றங்களைச் சேர்ந்த, 106 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் 800 பேருக்கு தொற்று ஏற்பட்டது. சில அதிகாரிகளை நாம் இழந்துள்ளோம். அனைவரும் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X