பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 30,621 பேருக்கு கொரோனா: 297பேர் உயிரிழப்பு

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 30, 621பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 297பேர் உயிரிழந்து உள்ளனர். 19,508 287பேர் குணமடைந்து உள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 58,129மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 30,621பேருக்கு கொரோனா உறுதியானது. அதில்,13 பேர், வெளி நாடு மற்றும் வெளி

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 30, 621பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 297பேர் உயிரிழந்து உள்ளனர். 19,508 287பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news



இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 58,129மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 30,621பேருக்கு கொரோனா உறுதியானது. அதில்,13 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், 30,608பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,99,485ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,46,25,416 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 17,532பேர் ஆண்கள், 13,089 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 8,99,757ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 5,99,720ஆகவும் அதிகரித்து உள்ளது. 19,287பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,98,945ஆக உயர்ந்தது.

297பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில், 109பேர் தனியார் மருத்துவமனையிலும், 188பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,768 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
14-மே-202110:20:34 IST Report Abuse
siriyaar இனி மேல் 300க்கு மேல் எவ்வளவு வருகிறதோ அது அதிலிருந்து அழிக்கப்படும். 300 க்கு மிகாமல் பார்ரதுகொள்ளபடும் அனைத்து மருத்துவமனைகளையும் டிஜிட்டல் ஆக்கினால் மட்டுமே இனி உண்மை தெரியும்.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
14-மே-202107:02:45 IST Report Abuse
siriyaar அட்டை கத்தியை சென்னை மக்கள் நம்பலாம் ஏன்னா சினிமா அங்குதான் உற்பத்தி ஆகிறது. நடிகர் விஜய் மாதிரி ஆட்கள் அதை வைத்து பல வில்லன்களை தாக்குவதை பல திரைப்பட படப்பிடிப்புகள் மூலம் நேராக கண்டனர். ஆனால் கோரோனா பயப்படாது.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
14-மே-202102:40:19 IST Report Abuse
M  Ramachandran யாரை நொந்து என்ன பயன் நம்முடைய தவறும் உள்ளது. தேர்தல் பரப்புரையின் போது எல்லா கட்சிகளுமே கொராநா பற்றி கவலைகொள்லாமல் கூட்டம் சேர்பதிலேயே கவனம் செலுத்தினார்கள்.மக்கள் கவனமுடன் இருந்திருக்கா வேண்டும்அலட்சியம் செய்தார்கள். இப்போ அதன் பலன் மோசமாக அனுபவிக்க வேண்டி யுள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X