சத்தீஸ்கரில் புதிய தலைமை செயலகம் கட்டுமான பணிகள் நிறுத்தம்

Updated : மே 13, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி :சத்தீஸ்கரில், புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கான ஒப்பந்த புள்ளியை, அம்மாநில அரசு ரத்து செய்தது. சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாஹெல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தின் புதிய ராய்ப்பூர் பகுதியில், புதிய தலைமை செயலகம், கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கான இல்லங்கள் உள்ளிட்டவை கட்டுவதற்காக, 2019 நவம்பரில் பூமி பூஜை
புது, தலைமை செயலகம், கட்டுமானம், நிறுத்தம்

புதுடில்லி :சத்தீஸ்கரில், புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கான ஒப்பந்த புள்ளியை, அம்மாநில அரசு ரத்து செய்தது.

சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாஹெல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்தின் புதிய ராய்ப்பூர் பகுதியில், புதிய தலைமை செயலகம், கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கான இல்லங்கள் உள்ளிட்டவை கட்டுவதற்காக, 2019 நவம்பரில் பூமி பூஜை போடப்பட்டது.கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் முடிவு செய்யப்பட்டு, கவர்னர் மற்றும் முதல்வர் இல்ல கட்டட பணிகள் துவங்கி நடந்து வந்தன.
சத்தீஸ்கரில், 1.22 லட்சத்துக்கு மேற்பட்டோர், தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news


'இந்த நேரத்தில், மாநில அரசு செலவுகளை குறைக்க வேண்டும்' என, எதிர்க்கட்சியான பா.ஜ., வலியுறுத்தி வந்தது.இதையடுத்து, 118 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கு அளிக்கப்பட்ட ஒப்பந்த புள்ளியை, மாநில அரசு ரத்து செய்தது.
மேலும், 245 கோடி ரூபாய் செலவில் கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு புதிய இல்லங்கள் கட்டும் பணியும் நிறுத்தப்படுவதாக, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அறிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-மே-202110:54:53 IST Report Abuse
ஆரூர் ரங் உங்க பக்கத்து பிகார் மாநில ஆளுக்கு 380 கோடி வாரிக் கொடுக்குமளவுக்கு எங்க தளபதி 😎யிடம் பணம் உள்ளது. எனவே இங்கு கட்டுமானங்கள் தொடர்வதில் பிரச்சனையில்லை
Rate this:
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.)எல்லோருக்கும் சமாதி காட்டுவதே சங்கிகளின் லட்சியம். திறமையற்ற மத்திய அரசு....
Rate this:
Rajas - chennai,இந்தியா
14-மே-202112:05:43 IST Report Abuse
Rajasஒரு மாநில கட்சியே 380 கோடி கொடுத்தால், குஜராத் மாநில தேர்தல், 2014 பார்லிமென்ட் தேர்தலுக்கு அந்த தேசிய கட்சி அதே ஆளுக்கு எவ்வளவு கொடுத்திருப்பார்கள்....
Rate this:
Cancel
14-மே-202110:50:25 IST Report Abuse
ஆரூர் ரங் விவசாயம் நெசவுக்கு அடுத்ததாக அதிக 👍பல கோடி வேலைவாய்ப்பு தருவது கட்டுமானம். அதனை நிறுத்தினால் வேலையிழப்பு அதிகமாகும். 130 கோடி பேருக்கும் ஆண்டுக்கணக்கில் ஓசி சாப்பாடு போட்டுக் கொண்டிருக்க 🤔முடியாது
Rate this:
Rajas - chennai,இந்தியா
14-மே-202112:08:41 IST Report Abuse
Rajas/////130 கோடி பேருக்கும் ஆண்டுக்கணக்கில் ஓசி சாப்பாடு போட்டுக் கொண்டிருக்க முடியாது//// அதே மக்களிடம் வாங்கிய GST , மறைமுக வரி, பெட்ரோல் வரி என்ற வகையில் வந்த லட்சம் கோடிகள் எங்கே போனது. GST மட்டுமே ஒவ்வொரு இந்தியனும் மாதம் 1000 ரூபாய் தருகிறான்....
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
14-மே-202110:03:23 IST Report Abuse
siriyaar பாராளுமன்ற கட்டிடம் கட்டுவது தொடரவேண்டும். கோரோனா வந்திடுச்சு என்பதற்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களை நிறுத்தினால் அது தவறான சமிக்கைகளை அளிக்கும் சீனா இந்திய மீதான பயோ போரை அதிகரிக்கும். இந்திய தோற்றால் ராகுல் அதிகம் மகிழ்வார்.
Rate this:
Rajas - chennai,இந்தியா
14-மே-202112:10:29 IST Report Abuse
Rajasபார்லிமென்ட் கட்டுவது வளர்ச்சி திட்டமா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X