அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொடர்கிறது விலகல்; கலகலக்கிறது கமல் கட்சி

Updated : மே 15, 2021 | Added : மே 13, 2021 | கருத்துகள் (28+ 55)
Share
Advertisement
சென்னை :கமலின், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து, துணை தலைவர் மகேந்திரன் விலகிய நிலையில், தலைமை அலுவலக பொதுச் செயலரும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சந்தோஷ்பாபு மற்றும் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட, சமூக ஆர்வலர் பத்மப்ரியா ஆகியோர், நேற்று கட்சி பொறுப்பில் இருந்து விலகியுள்ளனர்.திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய நடிகர் கமல்,
 விலகல், கலகலக்கிறது, கமல் ,கட்சி

சென்னை :கமலின், மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து, துணை தலைவர் மகேந்திரன் விலகிய நிலையில், தலைமை அலுவலக பொதுச் செயலரும், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சந்தோஷ்பாபு மற்றும் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட, சமூக ஆர்வலர் பத்மப்ரியா ஆகியோர், நேற்று கட்சி பொறுப்பில் இருந்து விலகியுள்ளனர்.

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய நடிகர் கமல், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். வெற்றி பெறாவிட்டாலும், பெற்ற ஓட்டுகள் கட்சியில் நம்பிக்கையை விதைத்தது. ஓய்வு பெற்றவர்கள், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என, பலரும் இணைந்தனர்.சட்டசபை தேர்தலில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல், கமல் தோல்வியுற்றார். அனைத்திற்கும் மேலாக, லோக்சபா தொகுதியில் வாங்கியதை விட, குறைவான ஓட்டுகளே பெற முடிந்தது.

இதனால், கமல் கட்சியில் ஏற்பட்ட சலசலப்பில், முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் அழைத்த கமல், 'பதவிகளை ராஜினாமா செய்யுங்கள்' என, உத்தரவிட்டார். அதை ஏற்று, கமலுடன் ஆரம்பம் முதல் பயணித்த துணை தலைவர் மகேந்திரன், பதவியை ராஜினாமா செய்தது மட்டுமின்றி, கட்சியில் இருந்தும் விலகினார்.அவரை தொடர்ந்து பலரும் விலகுவர் என, எதிர்பார்த்த வேளையில், நேற்று முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்ட, தலைமை அலுவலக பொதுச் செயலரான சந்தோஷ்பாபு மற்றும் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட, சமூக ஆர்வலர் பத்மப்ரியா ஆகியோர் விலகினர்.'சொந்தக் காரணங்களுக்காக, கட்சியில் இருந்து விலகுகிறேன். கமலுக்கு நன்றி' என, சந்தோஷ்பாபு கூறியுள்ளார்.

பத்மப்ரியா கூறியுள்ளதாவது: சில காரணங்களுக்காக, விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை என் தொகுதி மக்களான, உங்களுடன் பகிர்வது கடமை. என் களப்பணி எப்போதும் போல, இன்னும் சிறப்பாக தொடரும். எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத, ஒருநடுத்தர குடும்ப பெண்ணை, உங்கள் வீட்டுப் பிள்ளையாக எண்ணி ஏற்று, ஊக்கம் கொடுத்தமைக்கு, மதுரவாயல் மக்களுக்கு நன்றி.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (28+ 55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
19-மே-202115:58:32 IST Report Abuse
madhavan rajan தவறு ஒன்று செய்தால் ஒப்புக்கொண்டு திருந்தும் பனப்பக்குவம் எல்லோருக்கும் வராது. அதுவும் கமலுக்கு வரவே வராது.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
15-மே-202121:48:11 IST Report Abuse
bal முதல்ல டெபாசிட் காலி இப்போ கூடாரம் காலி எப்படி இருந்தாலும் இழப்பு அச்சாரம் மூலம் சரியாகிவிட்டது...
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
14-மே-202118:21:08 IST Report Abuse
Vijay D Ratnam அதிமுக திமுக என்று ரணகளமாக இருக்கும் தமிழக அரசியல் களத்தில் கமல்ஹாசன், டிடிவி.தினகரன், சீமான், வைகோ, திருமாவளவன், சரத்குமார், வேல்முருகன், ஜவஹருல்லா போன்ற பஃபூன்கள் இருந்தால்தான் களைகட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X