புதுடில்லி :ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் இருந்த குறைபாடுகளை கண்டறிய, உயர்மட்ட குழு ஒன்றை, தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சமீபத்தில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்தன.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடந்த அந்த தேர்தல்களின்போது தேர்தல் ஆணையத்தின்மீது பல புகார்கள் எழுந்தன.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றத் தவறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், அந்த தேர்தல்களில் கிடைத்த அனுபவம் மற்றும் குறைபாடுகளை கண்டறிவதற்கு, தேர்தல் ஆணையம், ஒரு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. தேர்தலின்போது, மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் மத்தியில், வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்துவதில் இருந்த சிக்கல்களை, இந்த குழு ஆய்வு செய்ய உள்ளது.

தேர்தலுக்கான செலவு மேலாண்மை ஒழுங்குமுறையை வலுபடுத்தும் வழிமுறைகளையும் இந்த குழு வகுக்க உள்ளது.இவை அனைத்தையும் ஆய்வு செய்து, வரவிருக்கும் தேர்தல்களில் பின்பற்றவேண்டிய வழிமுறைகளை இந்த குழு பரிந்துரைக்கும். அந்த பரிந்துரைகள் அடிப்படையில், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE