பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.12 ஆயிரம் நிதி வழங்கிய செஞ்சி பள்ளி மாணவி

Updated : மே 16, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
செஞ்சி: கொரோனாவை கட்டுப்படுத்த, முதல்வரின் நிவாரண நிதிக்கு, செஞ்சி பள்ளி மாணவி, 12 ஆயிரம் ரூபாயை வழங்கினார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ராஜேந்திரா நகரை சேர்ந்த கந்தசாமி - ஸ்ரீதேவி தம்பதியின் மகள் தன்வந்தி, 9; தனியார் பள்ளியில், நான்காம் வகுப்பு படிக்கிறார்.இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று, தான் ஐந்து ஆண்டுகளாக சேமித்துள்ள, 10 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரண
முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.12 ஆயிரம் நிதி வழங்கிய செஞ்சி பள்ளி மாணவி

செஞ்சி: கொரோனாவை கட்டுப்படுத்த, முதல்வரின் நிவாரண நிதிக்கு, செஞ்சி பள்ளி மாணவி, 12 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ராஜேந்திரா நகரை சேர்ந்த கந்தசாமி - ஸ்ரீதேவி தம்பதியின் மகள் தன்வந்தி, 9; தனியார் பள்ளியில், நான்காம் வகுப்பு படிக்கிறார்.இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று, தான் ஐந்து ஆண்டுகளாக சேமித்துள்ள, 10 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப் போவதாக, பெற்றோரிடம் கூறி உள்ளார்.

நெகிழ்ச்சியடைந்த பெற்றோர், கொரோனா நிவாரணமாக அரசு வழங்கவுள்ள, 2,000 ரூபாய், மகள் சேமித்த, 10,000 என, மொத்தம் 12 ஆயிரம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்தனர். சிறுமி தன்வந்தி, தன் பெற்றோருடன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தானை நேற்று சந்தித்து, 12 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். சிறுமியை, அமைச்சர் மஸ்தான் பாராட்டி சால்வை அணிவித்தார். செஞ்சி தாசில்தார் ராஜன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
14-மே-202102:52:43 IST Report Abuse
Girija விளம்பரமே இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X