இந்தியா

என்.ஆர்.சி., தகவல் மறு ஆய்வு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கவுஹாத்தி :'வடகிழக்கு மாநிலமான அசாமில் என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடியுரிமை பதிவேடு கணக்கெடுப்பு தகவல்களில் தவறு உள்ளது. மறுஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துஉள்ளது. நம் அண்டை நாடான வங்கதேச எல்லையில் அமைந்துள்ளதால்,
NRC, National Register of Citizens, Supreme Court, SC, Assam, உச்ச நீதிமன்றம், வழக்கு

கவுஹாத்தி :'வடகிழக்கு மாநிலமான அசாமில் என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடியுரிமை பதிவேடு கணக்கெடுப்பு தகவல்களில் தவறு உள்ளது. மறுஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துஉள்ளது. நம் அண்டை நாடான வங்கதேச எல்லையில் அமைந்துள்ளதால், அங்கிருந்து அகதிகளாக வந்த பலர், குடியுரிமை பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது.


latest tamil news




இதையடுத்து அசாமில் தேசிய குடியுரிமை பதிவேடு கணக்கெடுப்பு நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டது. கடந்த 2019ல் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 19 லட்சம் பேர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அசாமின் என்.ஆர்.சி., ஒருங்கிணைப்பாளர் ஹிதேஷ் தேவ் சர்மா உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:அசாமில் நடந்த தேசிய குடியுரிமை பதிவேடு வரைவு கணக்கெடுப்பு மற்றும் துணைக் கணக்கெடுப்பு பட்டியல்களில் பல தவறுகள் உள்ளன.

உண்மையான இந்திய குடிமக்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் பொய்யான மற்றும் போலி ஆவணங்கள் வாயிலாக பலர் பட்டியலில் இணைந்துள்ளனர்.
அதனால் இந்த பட்டியல் தொடர்பான தகவல்களை மறு ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக, ஒரு கண்காணிப்பு குழுவை அமைக்கலாம். மாவட்ட நீதிபதி, மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி., உள்ளிட்டோர் அடங்கிய இந்த குழுவின் கண்காணிப்பில் தகவல்கள் சரிபார்க்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
14-மே-202109:04:16 IST Report Abuse
GMM எதற்கு எடுத்தாலும் நீதிமன்றம் நாடும் பழக்கத்தை கைவிடுங்கள். நீதிமன்றத்தில் எந்த அரசு ஆவணமும் compare பண்ண பராமரிப்பது இல்லை. அரசுதுறைகள் நகல் அனுப்புவது இல்லை. நீதிமன்றம் எதன் அடிப்படையில் மனுவை விசாரிக்கும்? போலி வக்கீல்கள் அரசு, மக்கள் மற்றும் நீதிமன்றத்தை குழப்பி விடுவர். NRC யில் உள்ள தவறை அரசு தைரியமாக திருத்தலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X