பொது செய்தி

தமிழ்நாடு

இன்று முதல் கடும் நடவடிக்கை : டி.ஜி.பி., திரிபாதி எச்சரிக்கை

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (56)
Share
Advertisement
சென்னை :'முழு ஊரடங்கு உத்தரவை மீறுவோர்கள் மீது, இன்று முதல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி.,திரிபாதி எச்சரித்துள்ளார்.நேற்றிரவு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கொடிய கொரோனா நோயை கட்டுப்படுத்த, தமிழகத்தில், மே, 10ல் இருந்து, முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தி உள்ளது.இதையொட்டி, அனைத்து இடங்களிலும், காவல் துறை சார்பில், ஒலி பெருக்கி வாயிலாகவும்,
 இன்று , கடும் நடவடிக்கை , டி.ஜி.பி., திரிபாதி எச்சரிக்கை

சென்னை :'முழு ஊரடங்கு உத்தரவை மீறுவோர்கள் மீது, இன்று முதல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி.,திரிபாதி எச்சரித்துள்ளார்.

நேற்றிரவு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கொடிய கொரோனா நோயை கட்டுப்படுத்த, தமிழகத்தில், மே, 10ல் இருந்து, முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தி உள்ளது.இதையொட்டி, அனைத்து இடங்களிலும், காவல் துறை சார்பில், ஒலி பெருக்கி வாயிலாகவும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும், 'முக கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம்' என, அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.


latest tamil news



இந்த அறிவுரைகளை சிலர் சரியாகவும், ஒழுங்காகவும் பின்பற்றாததால், கொடிய தொற்று மேலும் அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளது.

அதனால், இன்று முதல், முழு ஊரடங்கு உத்தரவை மீறி, தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் செல்வோர் மற்றும் நடமாடுவோர் மீது, தகுந்த சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, எச்சரிக்கப்படுகிறது.சட்டப்பூர்வ நடவடிக்கையில் இருந்து, பொது மக்கள் தங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, திரிபாதி கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THANGARAJ - CHENNAI,இந்தியா
14-மே-202113:38:39 IST Report Abuse
THANGARAJ ஐயா, ரொம்ப மிரட்டாதிங்க, எங்க ஏரியாவில் போலீஸ் காரர்கள் இன்னோவா காரில் 7 பேர் காரில் அமர்ந்து கொண்டு (எங்கே சமூக இடைவெளி) வந்து அத்தியாவசிய கடை, மளிகை, காய்கறி, பழம் கேன் தண்ணி, கடைகளில் 11 மணிக்கே ரவுண்ட்ஸ் வந்து, சத்தம் போட்டு, 11:45AM போலீஸ் காரர்கள் தானாகவே கடையை மூடி, கடை சாவிகளை எடுத்துக்கொண்டு பொதுமக்களையும் கஷ்ட படுத்தி, கடைக்காரர்களும் கஷ்ட படுத்தி, மன உளைச்சல் ஏற்படுத்தி, வியாபாரமும் இல்லாமல் (அன்பளிப்புக்காக) இவ்வாறு செய்கிறார்கள். உங்களிடம் நல்ல பெயர் வாங்க எங்களை கஷ்ட படுத்த வேண்டாமே......... சமூகம் கவனிக்குமா? பொது மக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் எங்களை சிரம படுத்த வேண்டாமே......
Rate this:
THANGARAJ - CHENNAI,இந்தியா
15-மே-202113:39:21 IST Report Abuse
THANGARAJநேற்று ரூ 1000 அபராதம் (அன்பளிப்பு) கொடுத்து கடை சாவி வாங்கி, இன்று மீண்டும் கடை திறந்து வியாபாரம் நடைபெற்றது. அபராத தொகையை இவர்கள் யாரிடம் வசூல் செய்வார்கள், சில பொருட்களின் விலை ஏற்றம் தான் அல்லது நஷ்டம் / கஷ்டம் தான். உங்களால், பாதிக்க படுவது யார்? என யோசிக்க முடிகிறதா?...
Rate this:
Cancel
ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி திரி பாதி சரி...அப்போ மீதி... என்னையா பண்ற.... பேர்ல கூடவா???
Rate this:
Cancel
Chandramouli - Mumbai,இந்தியா
14-மே-202112:42:14 IST Report Abuse
Chandramouli வடிவேலு பட காமெடி நினைவுக்கு வருகிறது. இன்று முதல் நல்ல மீன்கள் விற்பனை என்று. அதை போல் உள்ளது ஊரடங்கின் போலீஸ் அறிவிப்பு . தஞ்சை போலீசுக்கு நேர்ந்த நிலைமை நமக்கும் வருமோ என்ற பயம் போலீஸ்க்கு உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X