பொது செய்தி

இந்தியா

டைம்ஸ் குழும தலைவர் இந்து ஜெயின் காலமானார்

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: டைம்ஸ் குழும தலைவர் இந்து ஜெயின், தனது 84 வது வயதில் நேற்று (மே 13) காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.வாழ்க்கை வரலாறு:இந்து ஜெயின் 1936 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி உ.பி., மாநிலம் பைசாபாத் நகரில் பிறந்தார். பண்டைய வேதங்களை நன்கு கற்றறிந்த அவர், சிறந்த ஆன்மீகவாதியாகவும் இருந்தார். பெண்களின் உரிமைகளை தீவிரமாக ஆதரித்த அவர்,
Indu Jain, Times Group chairman,RIP Indu Jain, Passes away

புதுடில்லி: டைம்ஸ் குழும தலைவர் இந்து ஜெயின், தனது 84 வது வயதில் நேற்று (மே 13) காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


வாழ்க்கை வரலாறு:


இந்து ஜெயின் 1936 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி உ.பி., மாநிலம் பைசாபாத் நகரில் பிறந்தார். பண்டைய வேதங்களை நன்கு கற்றறிந்த அவர், சிறந்த ஆன்மீகவாதியாகவும் இருந்தார். பெண்களின் உரிமைகளை தீவிரமாக ஆதரித்த அவர், 1999ல் டைம்ஸ் குழுமத்தின் தலைவரானார். தனித்துவமான தலைமைத்துவ பாணியை உருவாக்கிய அவர், புதிய உயரத்திற்கு டைம்ஸ் குழுமத்தை கொண்டு சென்றார்.


latest tamil news


இந்தியாவின் மிகவும் மரியாதைக்குரிய இலாப நோக்கற்ற நிறுவனங்களில் ஒன்றான, டைம்ஸ் அறக்கட்டளையை, கடந்த 2000ஆம் ஆண்டில் அவர் நிறுவினார். இயற்கை பேரிடர்கள், தொற்று நோய்கள் மற்றும் பிற நெருக்கடியான காலத்தில், சமூக சேவை செய்வதுடன், நிவாரண நிதியையும் இந்த அறக்கட்டளை வழங்கும். இவரது சேவையை பாராட்டி, அவருக்கு 2016 ஜனவரி மாதம், பத்ம பூஷண் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.


latest tamil news


இந்நிலையில், கொரோனா தொடர்பான பிரச்னை காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு, தனது 84வது வயதில் இந்து ஜெயின் காலமானார். நேற்று இரவு 9.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


மோடி இரங்கல்:


இதுகுறித்து பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: டைம்ஸ் குழுமத் தலைவர் இந்து ஜெயினின் சமூக சேவை, இந்தியாவின் முன்னேற்றம் மீதான ஆர்வம் மற்றும் நம் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியது ஆகியவற்றால் என்றும் அவர் நம் நினைவில் இருப்பார். அவருடனான எனது நினைவுகளை நான் எண்ணி பார்க்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கல்கள். ஓம் சாந்தி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அ.வேல்முருகன் - Salem,இந்தியா
14-மே-202122:58:34 IST Report Abuse
அ.வேல்முருகன் இந்து ஜெயின் அவர்கள் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக ஆனால் சிறப்பாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. சமூக சேவையில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட இந்து ஜெயின் அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்/ வருந்துகிறோம்/வணங்குகிறோம்/
Rate this:
Cancel
S.PALANISAMY - COIMBATORE,இந்தியா
14-மே-202112:17:42 IST Report Abuse
S.PALANISAMY ஓம்
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
14-மே-202109:20:37 IST Report Abuse
 Muruga Vel RIP
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X