கங்கையில் நேற்றும் பிணங்கள்; பீதியில் உறைந்த பீஹார் மக்கள்

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
பாட்னா : பீஹாரில் நேற்று, மேலும் ஏராளமான சடலங்கள் கங்கையில் மிதந்தது, மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.பீஹாரில் பக்சர் மாவட்டம், கங்கை நதியோரம் அமைந்துள்ள குலாபி படித்துறை அருகே, இரு தினங்களுக்கு முன், 71 சடலங்கள் மிதந்து வந்தன. மாவட்ட நிர்வாகம், அந்த சடலங்களை கைப்பற்றி தகனம் செய்தது. அவை, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் சடலங்கள் எனக்
Bodies, Found, Ganga, Bihar

பாட்னா : பீஹாரில் நேற்று, மேலும் ஏராளமான சடலங்கள் கங்கையில் மிதந்தது, மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பீஹாரில் பக்சர் மாவட்டம், கங்கை நதியோரம் அமைந்துள்ள குலாபி படித்துறை அருகே, இரு தினங்களுக்கு முன், 71 சடலங்கள் மிதந்து வந்தன. மாவட்ட நிர்வாகம், அந்த சடலங்களை கைப்பற்றி தகனம் செய்தது. அவை, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் சடலங்கள் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பாட்னாவில் உள்ள கங்கையில், மேலும் பல சடலங்கள் மிதந்து வந்தது, அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியது. அவை, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அணியும் பாதுகாப்பு உடையுடன் இருந்தன. இதைத் தொடர்ந்து அந்த சடலங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, குலாபி படித்துறை அருகே உள்ள தகன மேடையில் எரியூட்டப்பட்டன.


latest tamil newsஏற்கனவே உத்தர பிரதேசத்தில், கங்கை நதி அருகே உள்ள உஜ்ஜியார், குலாதியா, பராலி படித்துறைகள், யமுனா நதி ஆகியவற்றில் மிதந்த, 57 சடலங்கள் கைப்பற்றப்பட்டு எரியூட்டப்பட்டன. இதைத் தொடர்ந்து, கங்கை மற்றும் அதன் உபநதிகள் பாயும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே கங்கையில் பிணங்கள் மிதப்பது தொடர்பான புகார்களின் அடிப்படையில் மத்திய ஜல சக்தி அமைச்சகம், உ.பி., மற்றும் பீஹார் மாநில அரசுகள் ஆகியவற்றுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajesh s -  ( Posted via: Dinamalar Android App )
14-மே-202118:13:27 IST Report Abuse
rajesh s ஒரு வேளை பாகிஸ்தான் சதியா....
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
14-மே-202113:05:05 IST Report Abuse
J. G. Muthuraj இந்திய சமய கலாச்சாரத்தில் ஊறிய ஒரு செயல்.....இந்தியாவில் 100 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட பேண்டமிக் சூழலிலும் இப்படிப்பட்ட செயல்கள் அரங்கேறின.....உடனடியாக கங்கை நீரை தூய்மைப்படுத்தும் பணியையும் முடுக்கி விட்டார்கள்......
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
14-மே-202112:42:31 IST Report Abuse
Natarajan Ramanathan பணமதிப்பு இழப்பின்போது வங்கி வாசலில் நிற்கவைத்துவிட்டார் மோடி என்று வசைபாடிய தீயமுக இன்று தமிழக மக்களை மயானத்தில் நிற்கவைத்துள்ளது
Rate this:
கழக ஆட்சி இது தமிழ் மக்களுக்கான ஆட்சி. - தமிழா ஹிந்துக்களிடம் ஏமாறாதே ,இந்தியா
14-மே-202113:04:08 IST Report Abuse
கழக ஆட்சி இது தமிழ் மக்களுக்கான ஆட்சி.ஹலோ அந்த பிணங்கள் தமிழ்நாட்டில் இல்லை பீஹார் UP...
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-மே-202115:11:26 IST Report Abuse
தமிழவேல் உங்க தலை, கடந்த ஒருவரிடத்தில் (வெளிநாடுகளில் நடப்பதை பார்த்தாவது) சரியாக திட்ட மிட்டிருந்தால், இன்று இந்த நிலைக்கு நாம் வந்திருக்க மாட்டோம். மருந்தில்லை, பெட் இல்லை, ஆக்சிஜன் இல்லை, ஆம்புலன்ஸ் இல்லை, தடுப்பூசி இல்லை ..... 24 நாலு மணிநேரமும், ஜாதி, மதத்தைப்பத்தி சிந்தித்துவிட்டு மற்றதை கோட்டை விட்ட பெருமகன்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X