பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் '5ஜி' அறிமுகமானால் பயன்படுத்த 4 கோடி பேர் ரெடி

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில், '5ஜி' அலைக்கற்றை சேவை துவக்கப்பட்டால், முதல் ஆண்டில் மட்டுமே, 4 கோடி பேர், இந்த சேவையை பயன்படுத்துவார்கள் என, தொலைத் தொடர்பு துறை நிறுவனமான, 'எரிக்சன்' தெரிவித்துள்ளது.அதுமட்டுமின்றி இந்த சேவையை, 'டிஜிட்டல்' சேவைகளுடன் வழங்கும்பட்சத்தில், வாடிக்கையாளர்கள் கூடுதலாக, 50 சதவீத கட்டணத்தை செலுத்த தயாராக இருக்கிறார்கள் என்றும்; வெறும் 5ஜி
5G, India, mobile network

புதுடில்லி: இந்தியாவில், '5ஜி' அலைக்கற்றை சேவை துவக்கப்பட்டால், முதல் ஆண்டில் மட்டுமே, 4 கோடி பேர், இந்த சேவையை பயன்படுத்துவார்கள் என, தொலைத் தொடர்பு துறை நிறுவனமான, 'எரிக்சன்' தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி இந்த சேவையை, 'டிஜிட்டல்' சேவைகளுடன் வழங்கும்பட்சத்தில், வாடிக்கையாளர்கள் கூடுதலாக, 50 சதவீத கட்டணத்தை செலுத்த தயாராக இருக்கிறார்கள் என்றும்; வெறும் 5ஜி இணைப்பு எனில், 10 சதவீதம் அளவுக்கே கூடுதலாக செலுத்த விரும்புவதாகவும், எரிக்சன் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில், 5ஜி சேவை குறித்து, 26 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொண்டு, தரவுகளை சேகரித்துள்ளது, எரிக்சன் நிறுவனம். அதில், உலகின் பல நாடுகள், டிஜிட்டல் சேவைகளுடன் கூடிய, 5ஜி இணைப்புக்கு, 20 - 30 சதவீதம் கூடுதல் கட்டணத்தை செலுத்த தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது.இந்தியாவில், 5ஜி ஸ்மார்ட்போன்களை பல நிறுவனங்கள் ஏற்கனவே விற்பனை செய்து வருகின்றன.


latest tamil news



இந்நிலையில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும்பட்சத்தில், முதல் ஆண்டில் மட்டும், 4 கோடி ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் இந்த சேவையை பெற தயாராக உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை கையில், 5ஜி போனை வைத்துக் கொண்டு, 4ஜி சேவை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை, ஸ்மார்ட்போன் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கையில், 22 சதவீதமாக இருக்கிறது என்கிறது, எரிக்சன் அறிக்கை.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
15-மே-202111:08:35 IST Report Abuse
வந்தியதேவன் ஏண்டா... உங்களுக்கு புத்தியே வராதா...? ஏற்கனவே ஒன்-ஜி வந்தப்ப... இயற்கை அமைதியாக இருந்தது... டூ-ஜி கொண்டு வந்தப்ப சுனாமி வந்தது... த்ரி-ஜி கொண்டு வந்தப்ப பெருமழை, பெருவெள்ளம் வந்தது... ஃபோர்-ஜி கொண்டு வந்தப்ப.. “கொரோனா” வந்துடுச்சு... அந்த சனியன் இன்னும் உலக மக்களை விரட்டிட்டு இருக்கு...? இந்தக் காலத்து பசங்கள கெடுக்குறதுக்குன்னே... ஆய்வாளர்கள் பணத்தாசையின் காரணமாக பைவ்-ஜி கொண்டு வரப்போறானுங்களாம்... இந்த இளைய தலைமுறை திருந்தவே மாட்டானுங்க போலிருக்கு... இனிமே, சோத்த தின்னாதீங்க.. பைவ்-ஜி...யே போதும்... அத்துடன் கல்யாணமெல்லாம் பண்ணிக்காதீங்க... பைவ்-ஜி...யே பார்த்து சந்தோஷப்பட்டுக்குகோங்க... உலகம் அழிவதற்கு கடவுள் வரவேண்டியதே இல்லை... “கொள்ளிக்கட்டைய தானே எடுத்து, தன் தலையில் தேய்ச்சுக்குற மாதிரி” இவனுங்களே உலகத்தை அழிச்சுவடுவானுங்க... இப்பவே, ஆட்ட கடிச்சு, மாட்ட கடிச்சு.. இந்தியாவில் கொத்து கொத்தா மனுஷனுங்க செத்துட்டிருக்கானுங்க... கங்கை நதியில் பார்த்தீர்களா.... இது நாடா, இல்ல சுடுகாடா...ன்னே தெரியல... இதுக்கெல்லாம் காரணமே அகம்பாவம், ஆணவம் பிடித்த கண்டுபிடிப்பாளர்களான மனிதர்கள்தான்... பைவ்-ஜி...ய கொண்டு வந்த மொத்தமா உலகத்தில் உள்ளவர்களின் “ஜோலி”ய முடிச்சுடுங்க...?
Rate this:
Cancel
ஆண்டவன் விட்ட வழி உயிரினங்களின் மென்மையான திசுக்கள் சிதைக்கப்படும். கேன்சர் போன்ற நோய்கள் அதிகமாகும்.
Rate this:
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
14-மே-202114:23:13 IST Report Abuse
வந்தியதேவன் ஏண்... உங்களுக்கு புத்தியே வராதா...? ஏற்கனவே ஒன்-ஜி வந்தப்ப... இயற்கை அமைதியாக இருந்தது... டூ-ஜி கொண்டு வந்தப்ப சுனாமி வந்தது... த்ரி-ஜி கொண்டு வந்தப்ப பெருமழை, பெருவெள்ளம் வந்தது... ஃபோர்-ஜி கொண்டு வந்தப்ப.. “கொரோனா” வந்துடுச்சு... அந்த சனியன் இன்னும் உலக மக்களை விரட்டிட்டு இருக்கு...? இந்தக் காலத்து பசங்கள கெடுக்குறதுக்குன்னே... ஆய்வாளர்கள் பணத்தாசையின் காரணமாக பைவ்-ஜி கொண்டு வரப்போறானுங்களாம்... இந்த இளைய தலைமுறை திருந்தவே மாட்டானுங்க போலிருக்கு... இனிமே, சோத்த தின்னாதீங்க.. பைவ்-ஜி...யே போதும்... அத்துடன் கல்யாணமெல்லாம் பண்ணிக்காதீங்க... பைவ்-ஜி...யே பார்த்து சந்தோஷப்பட்டுக்குகோங்க... உலகம் அழிவதற்கு கடவுள் வரவேண்டியதே இல்லை... “கொள்ளிக்கட்டைய தானே எடுத்து, தன் தலையில் தேய்ச்சுக்குற மாதிரி” இவனுங்களே உலகத்தை அழிச்சுவடுவானுங்க... இப்பவே, ஆட்ட கடிச்சு, மாட்ட கடிச்சு.. இந்தியாவில் கொத்து கொத்தா மனுஷனுங்க செத்துட்டிருக்கானுங்க... கங்கை நதியில் பார்த்தீர்களா.... இது நாடா, இல்ல சுடுகாடா...ன்னே தெரியல... இதுக்கெல்லாம் காரணமே அகம்பாவம், ஆணவம் பிடித்த கண்டுபிடிப்பாளர்களான மனிதர்கள்தான்... பைவ்-ஜி...ய கொண்டு வந்த மொத்தமா உலகத்தில் உள்ளவர்களின் “ஜோலி”ய முடிச்சுடுங்க...?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X