பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1500 செலவில் வணிக சிலிண்டரில் ஆக்சிஜன் நிரப்பி பயன்படுத்தலாம்: பேராசிரியர் பரிந்துரை

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
மதுரை: 'கொரோனா நோயாளிகள் உயிர்காக்க வணிக சிலிண்டர்களில் ஆக்சிஜன் நிரப்பும் நடவடிக்கை முன்கூட்டியே துவக்க வேண்டும்; ரூ.1500 செலவில் எளிதில் சிலிண்டரை மாற்றியமைக்கலாம்,' என ஸ்ரீவில்லிபுத்துார் கலசலிங்கம் பல்கலை உதவி பேராசிரியர் (இன்டஸ்டிரியல் சேப்டி ஆராய்ச்சியாளர்) ஜெயகுமார் மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.கொரோனா 2வது அலையால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
Oxygen, Professor, Recommend, ஆக்சிஜன், பேராசிரியர், பரிந்துரை, வணிக சிலிண்டர்

மதுரை: 'கொரோனா நோயாளிகள் உயிர்காக்க வணிக சிலிண்டர்களில் ஆக்சிஜன் நிரப்பும் நடவடிக்கை முன்கூட்டியே துவக்க வேண்டும்; ரூ.1500 செலவில் எளிதில் சிலிண்டரை மாற்றியமைக்கலாம்,' என ஸ்ரீவில்லிபுத்துார் கலசலிங்கம் பல்கலை உதவி பேராசிரியர் (இன்டஸ்டிரியல் சேப்டி ஆராய்ச்சியாளர்) ஜெயகுமார் மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

கொரோனா 2வது அலையால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. மூச்சு திணறலில் துடிக்கும் நோயாளிகளின் உயிர்காக்கும் ஆக்சிஜனின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. நோய் பரவலுக்கு முன் நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 1200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவையாக இருந்தது. தற்போதைய பயன்பாடு 5 ஆயிரம் மெட்ரிக் டன்னாக உள்ளது. வரும் நாட்களில் இதன் தேவை மேலும் அதிகரிக்கும். ஆக்சிஜன் தயாரிப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கியுள்ள நிலையில் அவற்றை நிரப்ப சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.


latest tamil news


ஜெயகுமார் கூறியதாவது: சிலிண்டர்கள் பற்றாக்குறையை தவிர்க்க தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் சிலிண்டர்களில்(சிஓ2 வகை) ஆக்சிஜனை நிரப்ப சேகரிக்கலாம். பொறியியல், பாலிடெக்னிக் கல்லுாரிகள், ஆட்டோ மொபைல் நிலையங்கள் என அனைத்து நிறுவனங்களும் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு தற்காலிகமாக அல்லது நன்கொடையாக சிலிண்டர்களை கொடுக்க முன்வந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றலாம். ஆக்சிஜன் சிலிண்டர்களை(ஓ2) இறக்குமதி செய்ய அவசியமில்லை. ஆக்சிஜன் நிறுவனங்கள் வணிக சிலிண்டர்களை 'கெமிக்கல் வாஷ்' செய்து பயன்படுத்தலாம். வால்வு மட்டும் மாற்றிட வேண்டும். இதற்கு ரூ.1500 செலவாகும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
14-மே-202115:35:50 IST Report Abuse
Vena Suna குழப்பம் வரும்....எங்கயாவது LPG வாயுவை OXYGEN என்று செலுத்திடுவானுங்க
Rate this:
Cancel
எளிமையான முதல்வர் ஐயா ஸ்டாலின் பார்த்து எச்சரிக்கையாக கையாள வேண்டும் தவறுதலாக கார்பன்டை ஆக்ஸைடு உள்ள சிலிண்டர்களை நோயாளிகளுக்கு கொடுக்காமல்
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
14-மே-202111:36:12 IST Report Abuse
PRAKASH.P Good idea. Government officials could try this urgently
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X