கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்கு, கட்சியே அல்லோகலப்பட்டது

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.,சின் எளிமை, திறமை, தலைமை மாண்பு, அரசியல் பக்குவம், பெண்களை மதிக்கும் பாங்கு... சொல்லிக் கொண்டே போகலாம். நீங்கள் நுாறாண்டு காலம் நன்றாக வாழ வேண்டும்.- நடிகை கஸ்துாரி சங்கர்'கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்கு, கட்சியே அல்லோகலப்பட்டது. இந்த ஆண்டு வெகுசிலரே அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தான் அரசியல்...' என, விரக்தியுடன் கூறத்
கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்கு, கட்சியே அல்லோகலப்பட்டது

முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்.,சின் எளிமை, திறமை, தலைமை மாண்பு, அரசியல் பக்குவம், பெண்களை மதிக்கும் பாங்கு... சொல்லிக் கொண்டே போகலாம். நீங்கள் நுாறாண்டு காலம் நன்றாக வாழ வேண்டும்.
- நடிகை கஸ்துாரி சங்கர்


'கடந்த ஆண்டு இவரின் பிறந்த நாளுக்கு, கட்சியே அல்லோகலப்பட்டது. இந்த ஆண்டு வெகுசிலரே அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தான் அரசியல்...' என, விரக்தியுடன் கூறத் துாண்டும் வகையில், நடிகை கஸ்துாரி சங்கர் அறிக்கை.



காலில் செருப்பு இல்லை; கல்யாணம் பண்ணி கொள்ளவில்லை. குடும்ப சொத்து தவிர வேறில்லை. ஊருக்கு உழைப்பவர்; மிகவும் எளிமையானவர், நாகர்கோவில் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., - எம்.ஆர்.காந்தி. பலர் தங்களை எளிமையானவர்களாக காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால், எளிமையின் கூடாரம், ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,
- தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்


'இவரை போன்றவர்களால் தான், நாட்டில் இன்னும் மழை பெய்கிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை.



இந்த உலகிற்கு கேரளா செய்துள்ள மிகப் பெரிய ஏற்றுமதி, நம் நர்ஸ்கள் ஆவர். ஆம். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுதும் நம் மாநில நர்ஸ்கள், மனித குலத்திற்கு சேவையாற்றி வருகின்றனர். இது, நமக்கு பெருமையான ஒன்றாகும்.
- கேரள முதல்வர் பினராயி விஜயன்


latest tamil news




'உண்மை தான். கேரளாவின் முகங்களாக, உலகம் முழுக்க, அந்த மாநில பெண்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை.



கொரோனா தடுப்பு பணிகளுக்காக, முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும்படி, முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நல்ல நோக்கத்திற்காக வசதி படைத்தவர்களும், மனம் படைத்தவர்களும் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டுகிறேன்.
- பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்


'கடந்த ஆண்டு, அப்போதைய முதல்வர் இ.பி.எஸ்., இது போல கேட்ட போது, தி.மு.க., பிரமுகர்கள் சிலர், 'இப்படி பிச்சை எடுக்கலாமா...' என்றனர். அது, இப்போது நினைவுக்கு வருகிறது...' எனக் கூறத் தோன்றும் வகையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை.



கடந்த ஆண்டு, எதிர்க்கட்சி தலைவராக இருந்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கொரோனாவால் மரணமடையும் முன்கள பணியாளர்களுக்கு, 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றார். இப்போது முதல்வரானதும், முன்கள பணியாளர்கள் மரணத்திற்கு, 25 லட்சம் ரூபாய் தான் ஒதுக்கியுள்ளார். இது தான் மரணத்தில் செய்யப்படும் அரசியலா?
- பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி


'இப்படி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி, ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கொரோனா படுத்தும் பாட்டில், 'ஏன் இந்த பதவிக்கு இப்போது வந்தோம்...' என, வருத்தப்படுவார்...' எனக் கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-மே-202106:44:50 IST Report Abuse
சந்திரசேகர் பினராயி விஜயன் சொல்வதை பார்த்தல் எல்லாரும் ஊதியம் வாங்காமல் இலவச சேவை செய்வது போல் உள்ளது.வெளிநாட்டில் போய் வேலை பார்ப்பதில் அப்படி என்ன பெருமை இருக்கு.அப்படி என்றால் கேரளாவில் வேலை வாய்ப்புகள் இல்லை என்று தானே அர்த்தம். ஏற்கனவே அதிகபட்ச ஆண்கள் சவுதி,துபாய் போயாச்சு. இப்ப பெண்களையும் அனுப்பிட்டா கேரளாவில் யார்தான் இருப்பது. வெளிநாட்டு வேலை என்பது வரம் இல்லை. அது சாபம். எல்லா சொந்தங்களையும் விட்டு விட்டு குடும்பத்தின் நன்மைக்காக தனிமையில் தன்னை வருத்தி உணர்ச்சிகளை அடக்கி அதிகாரிகள் திட்டும் போது மவுனமாய் இருக்கும் போது அந்த நிலைமை யாருக்கும் வரகூடாது. உங்களை போன்ற அரசியல்வாதிகளின் இயலாமை காட்டுகிறது இது போன்ற பேச்சு.எல்லா அரசியல்வாதிகளும் நான் ஆட்சிக்கு வந்தால் வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என்றுதான் சொல்கிறார்கள்.ஆனால் அப்படி எதுவும் சொல்கிற மாதிரி நடக்கவில்லை. தயவு செய்து இலவசத்தை கொடுக்காமல் எல்லோருக்கும் வேலை கொடுக்க முயற்சி செய்யுங்கள்.அவர்கள் தேவையை அவர்களே பார்த்து கொள்வார்கள்
Rate this:
Cancel
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
14-மே-202121:19:20 IST Report Abuse
த.இராஜகுமார் மோடியிடம் கேட்கவேண்டும் பெட்ரோல் விலை ஐம்பது ரூபாய் வரும் என்றும், டாலர் மதிப்பு என்ன ஆகியது என்று கேள்
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
14-மே-202120:47:24 IST Report Abuse
sankar "இ.பி.எஸ்.,சின் எளிமை, திறமை, தலைமை மாண்பு, அரசியல் பக்குவம், பெண்களை மதிக்கும் பாங்கு"- அனைவரின் எண்ணமும் இதுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X