பொது செய்தி

இந்தியா

106 உயர்நீதிமன்ற நீதிபதிகள்; 2,768 நீதிமன்ற அதிகாரிகளுக்கு கொரோனா

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: 'இதுவரை உயர் நீதிமன்றங்களின் 106 நீதிபதிகள், நீதிமன்றங்களில் பணியாற்றும் 2,768 அதிகாரிகள் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 நீதிபதிகளும், 34 அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் சார்பில் காணொலி மூலம் வழக்குகளை விசாரிப்பதற்கான தனியான செயலி தொடக்க விழா நேற்று நடந்தது.

புதுடில்லி: 'இதுவரை உயர் நீதிமன்றங்களின் 106 நீதிபதிகள், நீதிமன்றங்களில் பணியாற்றும் 2,768 அதிகாரிகள் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 நீதிபதிகளும், 34 அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.



latest tamil news


உச்ச நீதிமன்றத்தின் சார்பில் காணொலி மூலம் வழக்குகளை விசாரிப்பதற்கான தனியான செயலி தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பங்கேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
இந்த கொரோனா பெருந்தொற்று ஒவ்வொருவரையும் பாதிக்கிறது; வலியையும், வேதனையையும் தருகிறது. கடந்த 2020, ஏப்ரல் 27ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஊழியர் ஒருவர் கொரோனாவில் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதுவரை உயர் நீதிமன்றங்களின் 106 நீதிபதிகள், நீதிமன்றங்களில் பணியாற்றும் 2,768 அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 பேரையும், 34 நீதிமன்ற அதிகாரிகளையும் கொரோனாவில் இழந்திருக்கிறோம்.


latest tamil news


மேலும் இதுவரை, உச்ச நீதிமன்ற பதிவாளர் துறையில் 800 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; கூடுதல் பதிவாளர்கள் 10 பேர் பல்வேறு கால கட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்ற விசாரணை முறையையே கொரோனா பெருந்தொற்று மாற்றியுள்ளது. ஆனால், மாற்றத்துக்கு எப்போதும் தயாராக நீதிமன்றம் இருந்ததால், பெருந்தொற்று காலத்தில் சூழலுக்கு ஏற்ப எளிதாக மாற முடிந்தது.
இவ்வாறு ரமணா தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
14-மே-202114:38:00 IST Report Abuse
R.RAMACHANDRAN வேதாளம் சேருமே வெள்ளெருக்கம் பூக்குமே பாதாள மூலி படருமே மூதேவி சென்றிருந்த வாழ்வாள் சேடன் குடி புகுமே மண்ரோரம் சொன்னார் மனை என்கிறார் ஒரு தமிழ் புலவர்.லஞ்சம் பேரருட் கொண்டு கட்ட பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கும் நீதிபதிகள் இன்னும் என்னவெல்லாம் அனுபவிப்பாரோ இந்நாட்டில்.
Rate this:
Cancel
RIN -  ( Posted via: Dinamalar Android App )
14-மே-202113:54:32 IST Report Abuse
RIN Keep on advised Government, but where is the gap and got affected themselves.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
14-மே-202113:14:34 IST Report Abuse
Vena Suna அவர்களும் மனிதர்கள் தானே....கொடுமை..பாவம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X