அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்எல்ஏ.,க்கள் மக்களின் பக்கம் நிற்கவேண்டிய காலகட்டம்: முதல்வர் அறிவுறுத்தல்

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (71)
Share
Advertisement
சென்னை: திமுக எம்எல்ஏ.,க்கள் மக்களின் பக்கம் உறுதியாக நிற்கவேண்டிய காலகட்டம் இது என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: மே 7-ம் தேதி அமைந்த அரசு போர்க்கால அடிப்படையில் கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலேயே
TamilnaduCM, Stalin, MLAs, Salary, தமிழகம், முதல்வர், ஸ்டாலின், எம்எல்ஏ, எம்பி, ஊதியம், நிவாரணம்

சென்னை: திமுக எம்எல்ஏ.,க்கள் மக்களின் பக்கம் உறுதியாக நிற்கவேண்டிய காலகட்டம் இது என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: மே 7-ம் தேதி அமைந்த அரசு போர்க்கால அடிப்படையில் கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்குவற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தனியார் அமைப்புகளும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி உதவுகின்றன. தேர்தலுக்கு முன்பாகவே ‛ஒன்றிணைவோம் வா' நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினோம். கபசுரக் குடிநீர், முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்கி திமுக.,வினர் மேற்கொண்ட பணிகள் பொதுமக்களுக்கு பாதுகாப்பானதாக இருந்தது.

ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதி என உயிர்காக்கும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கழகத்தின் சார்பில் ‛ஒன்றிணைவோம் வா' செயல்திட்டத்தை மீண்டும் துவங்கிட வேண்டும் என தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன். சட்டசபை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்எல்ஏ.,க்கள் மக்களின் பக்கம் உறுதியாக நிற்கவேண்டிய காலகட்டம் இது. பொறுப்புடனும், தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்து பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும். நானும் தொண்டர்களை போலவே களத்தில் இருப்பேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


latest tamil news
எம்எல்ஏ.,க்கள் - எம்பி.,க்கள் ஊதியம்


முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திமுக எம்எல்ஏ.,க்கள் மற்றும் எம்பி.,க்கள் ஒரு மாத ஊதியத்தை அளிப்பார்கள் என முதலவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது. ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி எம்எல்ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலின் ரூ.25 லட்சம் கொரோனா நிவாரண நிதிக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
15-மே-202112:53:34 IST Report Abuse
SENTHIL NATHAN சன் குழுமம் எவ்வளவு நன்கொடை KOடுத்தது ??
Rate this:
Cancel
Mahi ( லெட்டர் பேட் சூட்லீன் ) - திருச்சி ,இந்தியா
14-மே-202122:48:41 IST Report Abuse
Mahi ( லெட்டர் பேட் சூட்லீன் ) கடிதம் எழுதுவதை பார்த்தால் இடமிருந்து வலப்புறமாக எழுதுவது அரபியில் எழுதுவது போலுள்ளது
Rate this:
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
14-மே-202122:27:07 IST Report Abuse
Raja டிம்கா ஒரு கோடி கொடுக்கிறதாம்? பிகேவுக்கு 380 கோடி கொடுக்கறீங்க. மக்கள்கிட்ட நன்கொடை வழங்க சொல்றீங்க. அதிமுக ஆட்சிலயும் கொடுக்க மனசு வரல. இப்போதும் வசுல் பண்றதுக்குதான் வழி பாக்கறீங்க. உங்க அப்பா ஆசைய எப்ப நிறைவேத்த போறீங்க தளபதி. நான் இறந்தபிறகு கோபாலபுரம் வீடு மருத்துவமனையாக்கபடும்னு சொல்லிட்டு செத்தாரே நினைவிருக்கா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X