வான்கூவர் காப்பகத்தில் 192 பேர் பலியான சோகம்!

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
வான்கூவர்: கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள காப்பகங்களில், கொரோனா பரவிய காலத்தில், அதனை உடனடியாக அறிவிக்காததால், 192 பேர் உயிரிழந்ததும், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. பரவலை அறிவிப்பதில் தாமதம் !கனடாவின் வான்கூவர் நகரில் ஏராளமான முதியோர் காப்பகங்கள் செயல்படுகின்றன. இங்கு கடந்த ஆண்டு இறுதியில்,உள்ள முதியோர் காப்பகங்களில்
Vancouver, care homes, delay, coronavirus, outbreaks

வான்கூவர்: கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள காப்பகங்களில், கொரோனா பரவிய காலத்தில், அதனை உடனடியாக அறிவிக்காததால், 192 பேர் உயிரிழந்ததும், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.


பரவலை அறிவிப்பதில் தாமதம் !

கனடாவின் வான்கூவர் நகரில் ஏராளமான முதியோர் காப்பகங்கள் செயல்படுகின்றன. இங்கு கடந்த ஆண்டு இறுதியில்,உள்ள முதியோர் காப்பகங்களில் கொரோனா காரணமாக 192 பேர் உயிரிழந்ததும், ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த தகவலை, வான்கூவர் நகர சுகாதார அதிகாரிகள் மறைக்க முயன்றனர்.

ஆனால், தகவல் சுதந்திர சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் இது குறித்து பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன்படி கிடைத்த தகவலில், அந்த நகரில் செயல்படும் 42 காப்பகங்கள், கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அது மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, அதனை மறைக்க முயன்றனர்.

அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், அது குறித்த தகவலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. முதியவர்களின் குடும்பத்தினர், காப்பகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூட தெரிவிக்காமல் ரகசியமாக வைக்கப்பட்டது.

கொரோனா காரணமாக முதல் உயிரிழப்பு ஏற்பட்ட 5 நாட்களுக்கு முன்னர் தான், பாதிக்கப்பட்ட ஊழியர் மூலம் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனையடுத்து அந்த பகுதியில் தாமதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில், அதிகபட்சமாக, கிழக்கு வான்கூவரில் உள்ள லிட்டர் மவுன்டன் காப்பகத்தில் 41 பேர் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் அங்கிருந்த 114 பேரில் 99 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். 72 ஊழியர்களுக்கும் தொற்று உறுதிபடுத்தப்பட்டது.
அதேபோல், அங்கு உள்ள பல காப்பகங்களும் கொரோனா பரவலை தாமதமாக அறிவித்தன. தெற்கு வான்கூவர் நகரில் உள்ள ஜெர்மன் கனடியன் காப்பகத்தில், கடந்த நவ.,18 ல் காப்பகத்தில் கொரோனா உறுதியானது. ஆனால், அடுத்த 8 நாட்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அந்த காலகட்டத்தில் 61 முதியவர்கள் மற்றும் 54 பேர் உயிரிழந்தனர். காப்பகத்தில் இருந்த 25 பேர் உயிரிழந்தனர்.
மற்றொரு காப்பகம் ஒன்றில் டிச., 19 ல் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதியானது. 3 நாட்கள் மறைக்கப்பட்ட நிலையில், 24 பேர் உயிரிழந்தனர். அங்கிருந்த 76 பேர் மற்றும் 47 ஊழியர்களுக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டது.


latest tamil news


நியூ வெஸ்ட்மின்ஸ்டர் நகரில் உள்ள காப்பகத்தில், கிறிஸ்துமஸ் தினத்தில் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதியானது. ஆனால், அடுத்த 9 நாட்கள் எந்த கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படவில்லை. இதன் பின்னர், மார்ச் 5ல் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 28 பேர் உயிரிழந்தனர். 102 முதியவர்களும் 31 ஊழியர்களும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
14-மே-202118:52:23 IST Report Abuse
Kalyan Singapore இதே இந்தியாவில் நடந்திருந்தால் அந்த 195 பேர் இறந்ததன் பழியும் மோடிக்கே என்று நம் பத்திரிக்கைகள் எழுதும் அவர்களின் உடல்களை எரிப்பதாக பழைய ஒரு வீடியோ clip ஐயும் நம் TV channel கள் இடை விடாது காண்பிக்கும்
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
14-மே-202115:35:28 IST Report Abuse
Ellamman உத்தரபிரதேச நிலை போல தானோ அங்கும்???
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
14-மே-202113:05:21 IST Report Abuse
Vena Suna கனடா பணக்கார நாடு. அங்கு இப்படி நடப்பது மகாகேவலம்...பாவம் மக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X