பொது செய்தி

தமிழ்நாடு

ஆம்புலன்ஸ் ஆக மாறிய கார்கள்; களத்தில் இறங்கினார் ககன்தீப்சிங்

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
சென்னை: சென்னையில் ஆம்புலன்ஸ்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், லேசான அறிகுறி கொண்டவர்கள் மருத்துவமனை அல்லது கொரோனா சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்ல சிறப்பு மருத்துவ ஊர்தி கார்களை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அறிமுகம் செய்துள்ளார்.தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக சென்னையில்
ஆம்புலன்ஸ் ஆக மாறிய கார்கள்; களத்தில் இறங்கினார் ககன்தீப்சிங்

சென்னை: சென்னையில் ஆம்புலன்ஸ்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், லேசான அறிகுறி கொண்டவர்கள் மருத்துவமனை அல்லது கொரோனா சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்ல சிறப்பு மருத்துவ ஊர்தி கார்களை சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அறிமுகம் செய்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும், குறிப்பாக சென்னையில் மாநிலத்திலேயே அதிகபட்ச பாதிப்பு பதிவாகி வருகிறது. இதனால், நோய் தொற்று உள்ளவர்களை மருத்துவமனை அல்லது கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அழைத்து செல்ல போதிய ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் இருந்தது. மேலும், ராஜிவ் காந்தி மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாமல், நோயாளிகள் ஆம்புலன்சிலேயே காத்திருக்கும் சூழலும் இருந்து வருகிறது. சென்னையில் ஆம்புலன்ஸ் களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதனை போக்க மாற்று ஏற்பாடை சென்னை மாநகராட்சி எடுத்துள்ளது.


latest tamil news


புதிதாக பொறுப்பேற்ற சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி இரண்டு நாளில் 250 ஆம்புலன்ஸ்கள் தயார் செய்துள்ளார். அதாவது கார்களில் ஆம்புலன்ஸ் வசதி மேற்கொள்ளப்பட்டு சிறப்பு ஆம்புலன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. 15 மண்டலங்களில் இந்த சிறப்பு ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் தட்டுப்பாட்டை ஒரே நாளில் போக்கிய பேடியின் செயல் தற்போது பெருமளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
14-மே-202119:58:30 IST Report Abuse
அசோக்ராஜ் படத்தில் சமூக இடைவெளி அபாரம். அரசியல் வியாதியும் அடிகாரியும் இப்படித்தான் முன்னுதாரணமாக இருக்கணும். ஆனா பலசரக்குக்கடை வாசலில் நிற்கிற பொதுசனத்தை காக்கியை விட்டு அடிக்கணும். இதுதான் சமூகநீதி. இதுதான் பெரியார் மண்ணு. நான் ஆண்டை. நீ அடிமை. உனக்கு வேறு. எனக்கு வேறு.
Rate this:
Cancel
Saravanan Bala - Chennai,இந்தியா
14-மே-202119:53:29 IST Report Abuse
Saravanan Bala சும்மா நிறுத்தி வச்சிருக்கர அரசு மினிபஸ்களையும் ஆம்புலன்ஸாக பயன்படுத்தலாம். அரசு சொகுசு பேருந்துகளை ஆஸ்பத்திரி வளாகங்களில் நிறுத்தி அவசர வார்டா பயன்படுத்தலாம்
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
14-மே-202118:28:53 IST Report Abuse
M S RAGHUNATHAN இவர் தமிழ் நாட்டில் பிறந்தவர். சேலத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆகவே தமிழ் மிக நன்றாக பேசுவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X