அத்தியாவசிய மருந்துகளுக்கு அதிக விலை கூடாது: சீனாவுக்கு இந்தியா கோரிக்கை

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
ஹாங்காங்: 'கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றுக்கு அதிகவிலையை நிர்ணயிக்கக் கூடாது' என, சீனாவுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. ஹாங்காங்குக்கான இந்தியத் தூதர் பிரியங்கா சவுஹான் தெரிவித்துள்ளதாவது: கொரோனா பெருந்தொற்றின் 2ம் அலையின் தாக்கத்தைச் சமாளிக்க

ஹாங்காங்: 'கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றுக்கு அதிகவிலையை நிர்ணயிக்கக் கூடாது' என, சீனாவுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.


latest tamil news


ஹாங்காங்குக்கான இந்தியத் தூதர் பிரியங்கா சவுஹான் தெரிவித்துள்ளதாவது: கொரோனா பெருந்தொற்றின் 2ம் அலையின் தாக்கத்தைச் சமாளிக்க இந்தியாவைச் சேர்ந்த தனியார் மருத்துவ நிறுவனங்கள், சீனாவில் இருந்துதான் அதிக அளவில் மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருள்களை இறக்குமதி செய்து வருகின்றன. இந்த மருத்துவப் பொருள்கள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். அவற்றுக்கான விலையை அதிகம் உயர்த்தாமல் நிலையாக வைத்திருக்க சீனா நிறுவனங்கள் முன்வர வேண்டும். இதற்காக சீன அரசின் தரப்பு ஆதரவு தேவை.



latest tamil news


சீனாவில் உள்ள தனியார் நிறுவனங்களின் விலை நிர்ணயக் கொள்கையில் அரசு எந்த அளவுக்குத் தலையிட முடியும் என்பது தெரியவில்லை. எனினும், இந்த விஷயத்தில் சீன அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், சீனா சரக்கு விமான போக்குவரத்தை நிறுத்துவது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். சரக்குப் போக்குவரத்தில் விதிக்கப்பட்டுள்ள தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் ஆக்சிஜன் செறிவூட்டிகள், கொரோனா சிகிச்சைக்கான மருந்துப் பொருள்களை வாங்குவதற்காக இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ நிறுவனங்கள் சீனாவை அதிகம் நாடியுள்ளன. எனவே, இந்தியத் தூதரின் இந்த கோரிக்கை கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-மே-202105:43:19 IST Report Abuse
Mani . V ஆனா, இது எங்களுக்கு பொருந்தாது (அத்தியாவசிய மருந்துகளுக்கு அதிக விலை கூடாது). எங்களின் இரண்டு முதலாளிகள் என்ன விலை வேண்டுமானாலும் வைத்து மக்களை காலி செய்யலாம்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-மே-202100:32:05 IST Report Abuse
Pugazh V டிக்டாக் செயலியைத் தூக்கி ட்டு என்னவோ சைனாவையே தூக்கிட்டா மாதிரி குதிச்சானுங்க?? இப்போது கம்மிகளின் காலில் வுழறாங்களே
Rate this:
Cancel
14-மே-202119:46:39 IST Report Abuse
ஆப்பு என்னது? ஒரு சங்கியைக் கூட காணலே... காவி சாயம் வெளுத்துப்போச்சா?
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
15-மே-202107:14:32 IST Report Abuse
RaajaRaja Cholanஆப்பு எந்த சங்கியை தேடுது , அமைதி மார்கத்தை தேடலாமே , இடத்தை சிதறடிக்க வைக்க உதவும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X