பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா நிதிக்கு ரஜினி, அஜித், எவ்வளவு நன்கொடை ? குழப்பியது செய்தித்துறையா ?

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (61)
Share
Advertisement
சென்னை: நடிகர் அஜித் ரூ.2.5 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கியதாக செய்தி வெளியான நிலையில், ரூ.25 லட்சம் நிதி அளித்ததாக திருத்தப்பட்ட செய்தி குறிப்பை தமிழக செய்தித்துறை வெளியிட்டுள்ளது.தமிழகத்தின் கொரோனா நிவாரண பணிகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி பிரிவிற்கு நிதி வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, பொதுமக்கள், திரைபிரபலங்கள் என பலரும்

சென்னை: நடிகர் அஜித் ரூ.2.5 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கியதாக செய்தி வெளியான நிலையில், ரூ.25 லட்சம் நிதி அளித்ததாக திருத்தப்பட்ட செய்தி குறிப்பை தமிழக செய்தித்துறை வெளியிட்டுள்ளது.latest tamil newsதமிழகத்தின் கொரோனா நிவாரண பணிகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதி பிரிவிற்கு நிதி வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, பொதுமக்கள், திரைபிரபலங்கள் என பலரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். பெறப்படும் நன்கொடை, மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் அனைத்தும் வெளிப்படையாக பொதுவெளியில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகர் அஜித், தமிழக அரசின் கொரோனா நிவாரண பணிகளுக்காக ரூ.2.5 கோடி நிதி வழங்கியதாக தமிழக அரசின் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. இது அனைத்து மீடியாக்களிலும் வெளியானது. ஆனால் இதனை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மறுத்தார். ரூ.25 லட்சம் மட்டுமே அஜித் நிதியளித்ததாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதனையடுத்து, திருத்தப்பட்ட புதிய அரசின் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், அஜித் ரூ.25 லட்சம் என குறிப்பிட்டு வெளியிடப்பட்டது. அஜித் நிதி வழங்கியது தொடர்பாக எழுந்த குழப்பத்திற்கு தமிழக செய்தித்துறையின் தவறே காரணம் என கூறப்படுகிறது.


latest tamil news
ரஜினி நிதி கொடுத்தாரா ?


அதேபோல், சென்னை தலைமை செயலகம் வந்த நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா, ரஜினி சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கியதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், சில நிமிடங்களில் அந்த நிதி சவுந்தர்யா தரப்பில் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sam - Alaska,யூ.எஸ்.ஏ
17-மே-202100:42:54 IST Report Abuse
sam Why media always targeting media people? How many of us paid? (I mean 1% or 0.5% of annual salary) But we are always good at pointing others.
Rate this:
Cancel
15-மே-202107:31:40 IST Report Abuse
kulandhai Kannan நிதி பொறுப்பாளரின் பெயர் குமாரசாமியா??
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
15-மே-202106:03:44 IST Report Abuse
Sanny ரஜனிகந்து கொடுத்தாரா அல்லது சவுந்தர்யா தனது கணவனின் அபெக்ஸ் பார்மசி சார்பாக கொடுத்ததாக சொல்லுறாங்க, எது உண்மை, எது பொய். வழிதேங்காய்யை தெரு பிள்ளையாருக்கு அடித்தது. ரஜனி ரசிகர்களா? அல்லது பத்திரிகையாளர்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X