பொது செய்தி

இந்தியா

கொரோனா காலத்தில் விவசாயிகள் சாதனை: பிரதமர் மோடி

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா காலத்தில் கடுமையான சவால்கள் நிலவிய போதும், நமது விவசாயிகள், விவசாயத்தில் சாதனை படைத்து உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக
Pmmodi, narendra modi, Modi, farmers, பிரதமர் மோடி, விவசாயிகள், பிரதமர், நரேந்திர மோடி

புதுடில்லி: கொரோனா காலத்தில் கடுமையான சவால்கள் நிலவிய போதும், நமது விவசாயிகள், விவசாயத்தில் சாதனை படைத்து உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதுவரை 1.15 லட்சம் கோடி நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்நிலையில், வொது தவணைக்கான நிதியை பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் முறையில் விடுவித்துள்ளார். இதன்படி 9.5 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.


latest tamil news


இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: அக்சய திரிதியை நாளில் விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு ரூ.19 ஆயிரம் கோடி செலுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 10 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள். முதல் முறையாக, இந்த திட்டத்தின் கீழ் மே.வங்க மாநில விவ சாயிகளும் பயன்பெற உள்ளனர். கொரோனா காலகட்டத்தில் கடுமையான சவால்களுக்கு இடையேயும், விவசாயத்தில் விவசாயிகள் சாதனை செய்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், விவசாயிகளின் உற்பத்தி பொருளை, சாதனை படைக்கும் அளவிற்கு கொள் முதல் செய்து வருகிறது. குறைந்தபட்ச ஆதார விலையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்த பட்ச ஆதார விலையில் , கோதுமையானது 10 சதவீதம் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

நமது நாட்டின் மருத்துவ துறையானது அதிகளவு மருந்துகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்கிறது. மருந்துகள் மற்றும் மருந்து விநியோகத்தை பதுக்குவோர்கள் மீது மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போர்க்கால அடிப்படையில் போரிட்டு வருகிறோம். இக்காலத்தில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை பதுக்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
14-மே-202123:18:25 IST Report Abuse
தல புராணம் ரைட் சிக்னல் போட்டு நேரா போறா மாதிரி பாவ்லா பண்ணி லெப்டுலே பூந்து டாபாய்க்கிறதுலே நம்ம மோடிஜி கில்லாடி.. ஆளவந்தான் படத்திலே வில்லன் கமல்ஹாசன் "மேலே பாரு" ன்னு சொல்லிட்டு கழுத்தை தூக்கி மேலே பாக்குறவன் கழுத்த சரக்குன்னு வெட்டிடுவாப்புலே.. அது மாதிரி இவரு கிட்டே ஜாக்கிரதையா இருக்கணும்.. அசந்தா அம்புட்டு தான்..
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-மே-202121:48:43 IST Report Abuse
முக்கண் மைந்தன் சாதன என்ன ?
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-மே-202121:47:36 IST Report Abuse
முக்கண் மைந்தன் பிரச்சாரம் பண்ண போவ எலிக்சனு ஒன்னுயில்லியா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X