பொது செய்தி

தமிழ்நாடு

பெண்களே! கலைப்பொருள் செய்யுங்கள்: பரிசுகளை வெல்லுங்கள்

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: வளைகரம்... கலைவரம்... வசீகரம்! அலங்கோலத்தையும் அழகான கோலமாக்குவது தான் வளைகரத்தின் வசீகரம்... அதுதான் இறைவன் அவர்களுக்களித்த கலை வரம்! இயற்கை உங்களுக்கு அளித்த வரத்தை சிரத்தையோடு செதுக்குங்கள். சிறப்பான பரிசுகளை வெல்லுங்கள். நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவுதான் உங்கள் வீடுகளில் வேண்டாமென்று ஒதுக்கிய அல்லது பயன்பாடற்ற

சென்னை:


வளைகரம்... கலைவரம்... வசீகரம்!


அலங்கோலத்தையும் அழகான கோலமாக்குவது தான் வளைகரத்தின் வசீகரம்... அதுதான் இறைவன் அவர்களுக்களித்த கலை வரம்! இயற்கை உங்களுக்கு அளித்த வரத்தை சிரத்தையோடு செதுக்குங்கள். சிறப்பான பரிசுகளை வெல்லுங்கள்.



latest tamil news



latest tamil news



latest tamil news




நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவுதான்


உங்கள் வீடுகளில் வேண்டாமென்று ஒதுக்கிய அல்லது பயன்பாடற்ற பொருட்களை வைத்து, ஓர் அழகான கலைப்பொருளைச் செய்ய வேண்டும். நீங்கள் வண்ணங்களால் தூரிகை தீட்டலாம். சின்ன உளியால் செதுக்கி எடுக்கலாம். நாலு பொருளை உடைத்து ஒட்டலாம். ஆனால், அது பார்ப்பதற்கு அசரடிக்கும் அலங்காரப்பொருளாக இருக்க வேண்டும். கைவினைப் பொருளாக அதை தயாரிக்கும்போதே, ஒரு நிமிடம் மட்டுமே ஓடுகிற வீடியோவாக எடுத்து இன்று(14ம் தேதி) மாலை 5:00 - 7:00 மணிக்குள் கீழ்கண்ட டெலிகிராம் எண்ணுக்கு அனுப்பி வையுங்கள். மிகச்சிறப்பான கலைப்பொருட்களை வடிவமைத்த 50 மகளிர்க்கு தலா ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அசத்தல் பரிசு காத்திருக்கிறது.


வீடியோ அனுப்ப நீங்கள் செய்ய வேண்டியது...



93602 75216 என்ற எண்ணிற்கு டெலிகிராம் மூலமாக அனுப்பவும்.


மறந்துடாதீங்க இது மகளிர்க்கு மட்டும்!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ
14-மே-202122:01:24 IST Report Abuse
ஏடு கொண்டலு வளைக்கரம் வளை கரமல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X