பொது செய்தி

இந்தியா

வைரஸ் வாழ உரிமை உண்டு : மாஜி முதல்வர் சர்ச்சை பேச்சு

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
டேராடூன்: 'கொரோனா வைரஸ் ஓர் உயிரினம். அதற்கு வாழ உரிமை உண்டு' என, உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் செய்தியாளர்களிடம், 'ஒரு தத்துவ கோணத்தில் இருந்து பார்த்தால், கொரோனா வைரசும் ஓர் உயிரினம் தான். எஞ்சியவர்களைப் போலவே அதற்கும் வாழ உரிமை

டேராடூன்: 'கொரோனா வைரஸ் ஓர் உயிரினம். அதற்கு வாழ உரிமை உண்டு' என, உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.



latest tamil news


உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் செய்தியாளர்களிடம், 'ஒரு தத்துவ கோணத்தில் இருந்து பார்த்தால், கொரோனா வைரசும் ஓர் உயிரினம் தான். எஞ்சியவர்களைப் போலவே அதற்கும் வாழ உரிமை உண்டு. ஆனால் நாம் (மனிதர்கள்) நம்மை மிகவும் புத்திசாலி என்று நினைத்து, அதை அகற்றத் தயாராக இருக்கிறோம். இருப்பினும், மனிதன் பாதுகாப்பாக இருக்க அது போன்ற வைரஸ்களை விஞ்ச வேண்டியிருக்கிறது' எனத் தெரிவித்தார்.

'கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை நாட்டையே உலுக்கி வரும் சூழலில், கொரோனா குறித்து திரிவேந்திர சிங் ராவத் இவ்வாறு கூறியிருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இவரது கருத்து முன்களப் பணியாளர்களை சேர்வடையச் செய்யும்' என, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


latest tamil news


இந்நிலையில், திரிவேந்திர சிங் ராவத்தின் இந்த கருத்து, சமூக ஊடகங்களில் பேசு பொருளானது. பலரும் இது குறித்து கிண்டலாக எதிர்வினையாற்றினர். டுவிட்டர் பயனர் ஒருவர், 'இந்த வைரஸ் உயிரினத்திற்கு, மத்திய விஸ்டாவில் தங்குமிடம் கொடுக்கப்பட வேண்டும்' எனக் கிண்டலாகப் பதிவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HSR - MUMBAI,இந்தியா
15-மே-202104:10:57 IST Report Abuse
HSR எத்தனை ஆடு மாடு கோழி நாய் பூனை எலி மான் மீன்கள் திமிங்கலம் உட்பட சர்வாஜீவராசிகளும் இவர் கூறியதை போல வாழ உரிமையுள்ளது இந்த பூமி. இவற்றையெல்லாம் எவ்வளவு அழகாக கடவுள் படைத்துள்ளார்..ஆனா சில மார்கங்களில் இவையெல்லாம் மனிதன் உண்டு களிக்க இறைவனால் படைக்கப்பட்டவையாம். ஹாஹாஹா. ஏண்டா எளியது வலியதிடத்தில் வீழும். வலியதே வாழும் என்று அறிவியலும் கூறுகின்றது..நீ உன்னைவிட அறிவில் குறைந்த உயிரினங்களை பிடித்து லபக்கினால் உன் அறிவுக்கு ஏன் கண்ணுக்கு கூட பிடிபடாமல் உன்னையே விழுங்கும் வைரஸ்கள் செய்வது ஞாயம்தானே? ஆறறிவு உள்ள நீ பிறர் பிற உயிர்கள் துன்பத்தையும் வலியையும் உணரும் சக்தி கொண்ட நீயே ஜீவன்களிடத்தில் கருணை காட்டாத போது ஒரே ஒரு அறிவை கொண்டாந்த ஜீவன் உன் வலியை எப்படி உணரும்.? முடிந்தால் அதை விரட்டு. கொல்லு.ஆனால் இவர் கூற்று படி அந்த வைரஸ்கள் இறைவன் படைப்பே.என்ன ஒன்னு இது உன்னை சாப்பிட்டு களிக்க இறைவன் படைத்துள்ளார்..அம்புட்டுதான் . போ போ..முடிஞ்சத பண்ணு.இல்லேன்னா மடிஞ்சி போ..
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-மே-202121:37:09 IST Report Abuse
முக்கண் மைந்தன் டெய்லி ஒரு காக்கிலோ கொரோனாவ கரச்சி குடிங்க
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
14-மே-202120:31:15 IST Report Abuse
அசோக்ராஜ் காக்கை குருவி எங்கள் ஜாதி. கொடும் வைரஸ் பாக்டீரியா எங்கள் கூட்டம். நோக்க நோக்க களியாட்டம். வாஹ்ரே வா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X