பொது செய்தி

தமிழ்நாடு

4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும்: சென்னை வானிலை மையம்

Added : மே 14, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: அடுத்த 4 நாட்களுக்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய சூறைக்காற்றுடன் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக
HeavyRain, Nilgiris, WeatherReport, Chennai, அதி கனமழை, சென்னை, வானிலை மையம்,

சென்னை: அடுத்த 4 நாட்களுக்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய சூறைக்காற்றுடன் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக உருவாகிறது. இதனால் மே 17 வரை தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும். அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய சூறைக்காற்றுடன் அதி கனமழை பெய்யும்.


latest tamil news


அதேபோல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் கன முதல் மிகமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருப்பூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

குமரி கடல், லட்சத்தீவு, அரபிக்கடல் ஒட்டியுள்ள பகுதியில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

சென்னையை பொருத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறையில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskaran R V - CHENNAI,இந்தியா
14-மே-202114:40:02 IST Report Abuse
Baskaran R V rrr
Rate this:
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம், தமிழகம் ,இந்தியா
14-மே-202114:16:52 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா திமுகவுக்கு போய் ஓட்டுப்போட்டு ஜெயிக்கவச்சிடீங்களேன்னு இயற்கை தன் கோவத்தை காட்டுகிறது
Rate this:
கழக ஆட்சி இது தமிழ் மக்களுக்கான ஆட்சி. - தமிழா ஹிந்துக்களிடம் ஏமாறாதே ,இந்தியா
14-மே-202119:53:55 IST Report Abuse
கழக ஆட்சி இது தமிழ் மக்களுக்கான ஆட்சி.ADMK koranaavil 15 மாதம் படிச்சி டிகிரி வாங்கினான் , அனால் DMK 7 நாட்களில் DEGREE எப்படி வாங்க முடியும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X