இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி விலை; ரூ.995 ஆக நிர்ணயம்

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி: ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை இந்தியாவில் ரூ. 995 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு இந்தியத் தயாரிப்பு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. கொரோனா 2வது அலையால் அதிகரித்துவரும் கொரோனா பரவலில் இருந்து தப்பிக்க, மேலும் சில தடுப்பு மருந்துகளுக்கு அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய
Sputnik V, CovidVaccine, Price, Dr Reddys, RollsOut, India Rs995, PerDose, ஸ்புட்னிக் வி, கொரோனா, தடுப்பூசி, டாக்டர் ரெட்டிஸ்,விலை, நிர்ணயம், இந்தியா

புதுடில்லி: ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை இந்தியாவில் ரூ. 995 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு இந்தியத் தயாரிப்பு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. கொரோனா 2வது அலையால் அதிகரித்துவரும் கொரோனா பரவலில் இருந்து தப்பிக்க, மேலும் சில தடுப்பு மருந்துகளுக்கு அவசர கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, 3வதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது. 91.6 சதவீத செயல்திறனை கொண்ட இந்த தடுப்பூசிகள் இந்தியா வந்துள்ளன. அடுத்த வாரம் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும், ஜூலை மாதம் இந்தியாவில் இதன் தயாரிப்பு துவங்கம் என்றும் அறிவிக்கப்பட்டது.


latest tamil news



இந்நிலையில் ஸ்புட்னிக் தடுப்பூசியின் விலை ரூ. 995.40 (5% ஜிஎஸ்டி உள்பட) என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவில் இந்த தடுப்பூசியை தயாரிக்க உள்ள டாக்டர் ரெட்டிஸ் ஆய்வக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்கும்போது விலை குறையும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசி நாட்டிலேயே முதன் முறையாக ஐதராபாத்தில் சோதனைக்காக இன்று போடப்பட்டது. முதல் தடுப்பூசியை கஷ்டம் பார்மா சர்வீசஸ் (Custom Pharma Services) நிறுவன தலைவர் தீபக், நாட்டிலேயே முதன்முறையாக செலுத்திக் கொண்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-மே-202100:28:27 IST Report Abuse
Vittalananad அட கடவுளே! இத்திலுமா get ? நிர்மலா அம்மா தூங்குறீங்களா
Rate this:
Cancel
kijan - Chennai,இந்தியா
14-மே-202121:55:20 IST Report Abuse
kijan முதலாளித்துவ ...ஏகாதிபத்திய .... நாடுகள் கண்டுபிடித்த தடுப்பூசிகள் எல்லாம் 200 ரூபாய் ..... கம்மிக்கள் கண்டுபுடித்த மருந்து 1000 ரூபாயா ?
Rate this:
Cancel
Kaliraj N -  ( Posted via: Dinamalar Android App )
14-மே-202121:25:07 IST Report Abuse
Kaliraj N உயிருக்கு போராடுவங்களிடம்....GST வசூல்......நோயாளிள் இவர்களை நினைத்து வெட்க்கப்பட்டு கூனி குறுகி சாகவேண்டியதுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X