மழை எச்சரிக்கை; கோவை, மதுரையில் தேசிய பேரிடர் மீட்பு படை அலர்ட் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழை எச்சரிக்கை; கோவை, மதுரையில் தேசிய பேரிடர் மீட்பு படை 'அலர்ட் '

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (3)
Share
கோவை: கனமழை, நிலச்சரிவுக்கான முன்னெச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர், கோவை, மதுரையில் முகாமிட்டுள்ளனர்.அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் 'தவுக்தே' புயல் காரணமாக, கனமழை கொட்டும் என்றும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, அரக்கோணத்தில் இருந்து தேசிய
பேரிடர்_மீட்பு_படை; கோவை, மதுரை முகாம்

கோவை: கனமழை, நிலச்சரிவுக்கான முன்னெச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர், கோவை, மதுரையில் முகாமிட்டுள்ளனர்.

அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் 'தவுக்தே' புயல் காரணமாக, கனமழை கொட்டும் என்றும், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், தமிழகம், கேரளாவில், புயல் மழையால் பாதிக்க வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில், கோவை மாவட்டத்துக்கு, 44 பேர் கொண்ட இரு குழுவினர் வந்துள்ளனர். இவர்கள், துடியலுார் அருகே முகாமிட்டுள்ளனர். இதேபோல, மதுரைக்கும் இரு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news



அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள கேரளாவில், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், பதனம்திட்டா, ஆலப்புழா, கொல்லம், இடுக்கி மாவட்டங்களில் இக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்கும் உபகரணங்கள், கட்டட இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்கும் உபகரணங்கள், அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களுடன் மீட்புக்குழுவினர் வந்துள்ளனர்.
இவர்களது பணியை ஒருங்கிணைக்க, 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை, அரக்கோணத்தில் செயல்படுகிறது. மாநில அரசு, மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து பேரிடர் மீட்பு படையினர், தங்களது பணியை மேற்கொள்ள உள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X