பொது செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான இடைக்கால அறிக்கையை விசாரணை ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன், முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார்.கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர், பல பொதுச்சொத்துகள் சேதமடைந்தன. இது தொடர்பாக
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: முதல்வரிடம் இடைக்கால அறிக்கை தாக்கல்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான இடைக்கால அறிக்கையை விசாரணை ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன், முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர், பல பொதுச்சொத்துகள் சேதமடைந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்தது.


latest tamil news


இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான இடைக்கால அறிக்கையை ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் அளித்தார். இடைக்கால அறிக்கையில், 'பாதிக்கப்பட்டவர்களின் மீதான வழக்கை வாபஸ் பெறவேண்டும். வழக்கில் சிக்கி படிக்க, வேலைக்கு செல்ல முடியாமல் தவிப்பவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார ரீதியிலான உதவிகளையும் அரசு செய்ய வேண்டும்' ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையையும் முதல்வரிடம் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
15-மே-202110:16:47 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN அன்று போராட்டத்தை தூண்டிய இன்றைய எம் எல் ஏ கீதா ஜீவன், இன்றைய எம் பி கனிமொழி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யாதது ஏன் ?
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
15-மே-202109:50:54 IST Report Abuse
meenakshisundaram nooru naatkal amaidhiyaana poaattam ,nooaavadhu naal -police vaahana erippu ,thaakkudhal ponravai. idhanaal kalavaram adil 13 perkal irappu unmaienraavdhu veli varumaa?
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
15-மே-202108:47:59 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் கடந்த ஆட்சியிலேயே விசாரணை முடிந்தும், ஆட்சி மாறியவுடன் கொடுக்கப்படும் காரணம் என்ன மேடம் ?
Rate this:
Naresh Giridhar - Chennai,இந்தியா
15-மே-202111:26:07 IST Report Abuse
Naresh Giridharமோடி அடிமை ஆட்சி அதை கிடப்பில் போட்டிருப்பார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X