பொது செய்தி

இந்தியா

கேரளாவில் ஒரே நாளில் 34,694 பேர் பாதிப்பு; மே 23 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Updated : மே 14, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளத்தில் ஒரே நாளில் 34,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மே 23ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'கடந்த 24 மணிநேரத்தில் 1,31,375 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் 39,955 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 93 பேர் பலியானார்கள். இதனால்

திருவனந்தபுரம்: கேரளத்தில் ஒரே நாளில் 34,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மே 23ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'கடந்த 24 மணிநேரத்தில் 1,31,375 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் 39,955 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 93 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 6,243 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து இன்று மட்டும் 31,319 பேர் குணமடைந்தனர். இதுவரை 16,36,790 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



கேரளத்தில் கடந்த மே 8ம் தேதி முதல் 9 நாட்களுக்கு முழு ஊரடங்கை அந்த மாநில அரசு அறிவித்தது. நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடிவுக்கு வர இருந்த நிலையில் தொற்று அதிகரித்து வருவதால் வரும் 23ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
15-மே-202108:23:11 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இதுதான் கேரளா மாடல். எங்கே அருணன் கனகராஜ் RK ரவீந்திரநாத் சாந்தி எல்லோரும். இப்போது பேசவேண்டுயதுதானே. பாவம் கேரளா மக்கள் குரங்கு கையில சிக்கிய பூமாலை போல் கம்யூனிஸ்ட் களிடம் சிக்கியுள்ளனர். ஒட்டு போடும் முன் யோசித்திருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Selvaraj - Nagercoil,இந்தியா
15-மே-202101:21:19 IST Report Abuse
Selvaraj கேரளாவில் ஒரே நாளில் 35,000. பேர் பாதிப்பு (கேரளவின் மேல் ஏன் இந்த கொலைவெறி ) இந்தியாவில் ஒரே நாளில் 2,00,000. பேர் மீண்டனர் (positivity) கேரளாவில் யாருமே கொரோனவிலிருந்து மீளவில்லயோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X