பொது செய்தி

இந்தியா

விவசாயிகளுக்கு 8வது தவணை நிதி: துவக்கி வைத்தார் பிரதமர்

Updated : மே 16, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (4+ 24)
Share
Advertisement
புதுடில்லி:விவசாயிகளுக்கு எட்டாவது தவணையாக நிதியுதவி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி, ''கொரோனா பரவல் காலத்தில் கடுமையான சவால்கள் நிலவிய போதும், விவசாய உற்பத்தியில் விவசாயிகள் சாதனை படைத்துள்ளனர்,'' என, பெருமிதத்துடன் கூறினார். மத்திய அரசு 2019ல், 'பிரதம மந்திரி கிசான்' திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000
விவசாயிகள், 8வது தவணை ,  பிரதமர்

புதுடில்லி:விவசாயிகளுக்கு எட்டாவது தவணையாக நிதியுதவி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி, ''கொரோனா பரவல் காலத்தில் கடுமையான சவால்கள் நிலவிய போதும், விவசாய உற்பத்தியில் விவசாயிகள் சாதனை படைத்துள்ளனர்,'' என, பெருமிதத்துடன் கூறினார்.

மத்திய அரசு 2019ல், 'பிரதம மந்திரி கிசான்' திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2,000 ரூபாய் வீதம், மூன்று தவணைகளாக நிதி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை ஏழு தவணைகளில், 1.15 லட்சம் கோடி ரூபாய் விவசாயி களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் விவசாயிகளுக்கு எட்டாவது தவணைக்கான நிதியை 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பிரதமர் மோடி வழங்கினார்.


19 ஆயிரம் கோடி ரூபாய்

இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமரும் பங்கேற்றார். முதல் முறையாக இந்த திட்டத்தில் மேற்கு வங்க விவசாயிகளும் இணைந்தனர். இதையடுத்து எட்டாவது தவணையில் 9.5 கோடி விவசாயிகளுக்கு, 19 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது.

எட்டாவது தவணைக்கான நிதியை விடுவித்த பிரதமர் மோடி, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, ஆந்திரா, மேகாலயா, ஜம்மு - காஷ்மீர், அந்தமான் நிகோபர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:செல்வச் செழிப்புக்கு உகந்த அட்சய திருதியை நாளில் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 19 ஆயிரம் கோடி ரூபாய் பணம் செலுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் இப்போது, மேற்கு வங்க விவசாயிகளும் பயன்பெற உள்ளனர். கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள கடும் சவால்களுக்கு இடையிலும், விவசாயத்தில் விவசாயிகள் சாதனை படைத்துள்ளனர்.

விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை மத்திய அரசு அதிகளவில் கொள்முதல் செய்து வருகிறது. குறைந்தபட்ச ஆதார விலையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளின் நலனுக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் மத்திய அரசு, விவசாயிகளை ஊக்கு விக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.


கடும் நடவடிக்கை

இயற்கை விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும். இதற்கு குறைந்த அளவே முதலீடு தேவை. மனிதர்களுக்கும் நல்லது, மண்ணுக்கும் நல்லது, நல்ல லாபமும் கிடைக்கும். நம் நாட்டின் மருத்துவத்துறை அதிகளவு மருந்துகளை தயாரித்து வினியோகம் செய்கிறது. இப்போது நாம், கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போர்க்கால அடிப்படையில் போரிட்டு வருகிறோம்.

இந்த காலத்தில் அத்தியாவசிய பொருட்கள்மற்றும் மருந்துகளை பதுக்குவோர் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் இதுவரை 18 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணி விரைவு படுத்தப் பட்டு உள்ளது. மக்கள் அனைவரும் தங்கள் முறை வரும்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

எந்த சவாலையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் தைரியமும், மன உறுதியும் நமக்கு உள்ளதை, கொரோனா இரண்டாவது அலைக்கு எதிரான போரிலும் நிரூபிப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில்ரமலான் மற்றும் அட்சய திரிதியை வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்திருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (4+ 24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
15-மே-202120:13:18 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே இங்குள்ள காவிரி ஆற்றில் தினமும் இறந்த நாய்கள் ஆடு மாடுகளை போடுவதும்்சாய கழிவுகள் முதல் வீட்டின் கழிவுகள் வரை போடுவதும் சாமானியர்கள் அவர்களை அது தவறு என்று திருத்த முயலுங்களேன்
Rate this:
Cancel
கழக ஆட்சி இது தமிழ் மக்களுக்கான ஆட்சி. - தமிழா ஹிந்துக்களிடம் ஏமாறாதே ,இந்தியா
15-மே-202111:37:33 IST Report Abuse
கழக ஆட்சி இது தமிழ் மக்களுக்கான ஆட்சி. இவர் கொடுக்கப்போகிறது மாதத்திற்கு வெறும் 500 ரூபாய் தான் இதற்க்கு இவ்வளவு BUILT UP
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-மே-202105:48:33 IST Report Abuse
Mani . V முடியல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X