பொது செய்தி

இந்தியா

5 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை

Added : மே 14, 2021
Share
Advertisement
புதுடில்லி:அரபிக்கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால், தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவுகள் பகுதியில் குறைந்த
 5 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை

புதுடில்லி:அரபிக்கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால், தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவுகள் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் உருவானது.இது, இன்று மேலும் வலுவடைந்து புயலாக மாறி அடுத்த, 24 மணி நேரத்தில் குஜராத் - பாகிஸ்தான் கடல் பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

'டவ்டே' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், வரும் 18ம் தேதி மாலை, குஜராத் கடல் பகுதியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில், நாளை மிக கன மழை பெய்யும். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதை அடுத்து, ஐந்து மாநிலங்களிலும் மீட்பு பணிகளில் ஈடுபட, தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த, 53 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X