இதே நாளில் அன்று

Added : மே 14, 2021
Share
Advertisement
மே 15, 1803இங்கிலாந்தில் உள்ள செஷயரில், 1803 மே 15ம் தேதி பிறந்தவர், ஆர்த்தர் காட்டன். தன் 15வது வயதில், கிழக்கிந்திய கம்பெனியின் பொறியியல் பிரிவில் இணைந்தார். 1821ல், சென்னையில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணி ஏற்றார். தொடர்ந்து பல பதவிகளை வகித்த அவர், சென்னை மாகாண பொதுப்பணி துறையின் தலைமை பொறியாளராக பதவி உயர்வு பெற்றார்.காவிரி பாசன பகுதிக்கு

இதே நாளில் அன்று


மே 15, 1803



இங்கிலாந்தில் உள்ள செஷயரில், 1803 மே 15ம் தேதி பிறந்தவர், ஆர்த்தர் காட்டன். தன் 15வது வயதில், கிழக்கிந்திய கம்பெனியின் பொறியியல் பிரிவில் இணைந்தார். 1821ல், சென்னையில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணி ஏற்றார். தொடர்ந்து பல பதவிகளை வகித்த அவர், சென்னை மாகாண பொதுப்பணி துறையின் தலைமை பொறியாளராக பதவி உயர்வு பெற்றார்.காவிரி பாசன பகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர், மணல் மேடுகளால் நீரோட்டம் தடைபட்டிருந்த கல்லணையில், மணல் போக்கிகளை அமைத்தார். கொள்ளிடத்தின் குறுக்கே மேலணையை கட்டினார். தஞ்சாவூர் மாவட்டத்தில் அணைக்கரை கீழணை, வெண்ணாறு, வெட்டாறு உள்ளிட்ட நீர்ப்பாசன கட்டுமானங்களையும் கட்டினார்.ஆந்திராவில் கோதாவரி நதியின் தவ்லேஸ்வரத்தில் இவர் கட்டிய அணையால், 10 லட்சம்
ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. 1899 ஜூலை 24ம் தேதி, தன் 96வது வயதில் காலமானார்.'இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை' சர் ஆர்த்தர் காட்டன் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X