பொது செய்தி

தமிழ்நாடு

தினமும், 100 பேருக்கு உணவு வழங்கி சேவை திருப்பூர் பெண்ணுக்கு குவியும் பாராட்டு

Updated : மே 16, 2021 | Added : மே 14, 2021
Share
Advertisement
திருப்பூரில், தினமும், 100 பேரை தேடிச்சென்று உணவு வழங்கி வரும் பெண்ணை பலரும் பாராட்டுகின்றனர்.வெயில் கொளுத்திய ஒரு மதிய வேளையில், திருப்பூர் அனுப்பர்பாளையம் அவிநாசி ரோட்டில் உள்ள முதலாவது மண்டல அலுவலகம் அருகே ரோட்டோரம் அமர்ந்திருந்த முதியவர்கள் பசி மயக்கத்தில் இருந்தனர்.எங்கிருந்தோ வந்த ஒரு ஆட்டோவிலிருந்து வந்த பெண்ணை பார்த்ததும், பசி மயக்கத்தில் இருந்தவர்கள்
 தினமும், 100 பேருக்கு உணவு வழங்கி சேவை  திருப்பூர் பெண்ணுக்கு குவியும் பாராட்டு

திருப்பூரில், தினமும், 100 பேரை தேடிச்சென்று உணவு வழங்கி வரும் பெண்ணை பலரும் பாராட்டுகின்றனர்.

வெயில் கொளுத்திய ஒரு மதிய வேளையில், திருப்பூர் அனுப்பர்பாளையம் அவிநாசி ரோட்டில் உள்ள முதலாவது மண்டல அலுவலகம் அருகே ரோட்டோரம் அமர்ந்திருந்த முதியவர்கள் பசி மயக்கத்தில் இருந்தனர்.எங்கிருந்தோ வந்த ஒரு ஆட்டோவிலிருந்து வந்த பெண்ணை பார்த்ததும், பசி மயக்கத்தில் இருந்தவர்கள் திடீரென புன்னகைத்தவாறே, 'வாம்மா அன்னலட்சுமி' என அன்புடன் அழைத்தனர்.

கையில் தயாராக வைத்திருந்த சாப்பாட்டு பொட்டலங்களை கொடுத்தார். அதை பெற்று கொண்ட அனைவரும், அப்பெண்ணுக்கு நன்றி தெரிவித்தனர்.இவ்வாறு, தன்னலமற்ற சேவை செய்து வரும் திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் காலனியை சேர்ந்த லீலா ஜெகன், 35, கூறியதாவது:

கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், ஜெகன் என்பவருடன் திருமணம் நடந்தது. எங்களுக்கு இரு குழந்தைகள். என்னால், முடிஞ்ச அளவுக்கு யாருக்காச்சும் உதவணும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. கணவரும் என்னுடைய சேவை மனப்பான்மையை புரிந்து கொண்டார்.இதனால், ரோட்டோரம் உள்ள ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வந்தேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன், உடல் நலம் சரியில்லாமல் கணவர் இறந்தார். ஆனாலும், முடங்கி கிடக்காமல், தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் போராடினேன்.

கலெக்டர் ஆபீசில், தற்காலிக பணியாளராக வேலைக்கு சேர்ந்தேன். சம்பளத்தில், 2,000 ரூபாயை சேவை பணிக்கு எடுத்து வைத்து விடுவேன். அலுவலக வேலை நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில், காப்பகங்களுக்கு சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தேன்.எனக்கு கிடைத்த அன்பும், வரவேற்பும் ரொம்ப சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

தற்போது, தினமும், 100 உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறேன். ஆதரவற்ற முதியோர், குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்டோர் என, அனைவருக்குமான ஓர், 'அன்பு இல்லம்' கட்ட வேண்டும் என்பதே எனது எண்ணம்.இவ்வாறு அவர் கூறினார்.திருப்பூரின் 'அன்னலட்சுமிக்கு' வாழ்த்து சொல்ல விரும்பினால், 86758-63338 என்ற எண்ணில் அழைக்கலாம்.
-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X