பொது செய்தி

தமிழ்நாடு

அரபிக்கடலில் உருவானது 'டவ்டே' புயல்...!

Updated : மே 15, 2021 | Added : மே 14, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை : அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த, காற்றழுத்த தாழ்வு மண்டலம், 'டவ்டே' புயலாக உருவானது. இதன் காரணமாக, தமிழகத்தில் 10 மாவட்டங்கள், 'அலர்ட்' செய்யப்பட்டு உள்ளன. இடி, மின்னலுடன் கன மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இது தொடர்பாக, சென்னை வானிலை ஆராய்ச்சி மையம், நேற்று வெளியிட்ட அறிவிப்பு: லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டு
Arabian Sea,Cyclone,Tauktae, டவ்டே, புயல்

சென்னை : அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த, காற்றழுத்த தாழ்வு மண்டலம், 'டவ்டே' புயலாக உருவானது. இதன் காரணமாக, தமிழகத்தில் 10 மாவட்டங்கள், 'அலர்ட்' செய்யப்பட்டு உள்ளன. இடி, மின்னலுடன் கன மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆராய்ச்சி மையம், நேற்று வெளியிட்ட அறிவிப்பு: லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேலும் வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளது. அது, இன்று புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு, மியான்மர் வழங்கியுள்ள, 'டவ்டே' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.டவ்டே புயல், கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களை நோக்கி நகரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.


சூறைக்காற்று வீசும்இதன் காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசலாம். இதையடுத்து, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்து, திருப்பூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
இதில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில், நாளை மறுதினம் வரை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


28 செ.மீ., மழைநேற்று காலை, 8:30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம், இரணியலில், 28; குழித்துறையில், 11; பேச்சிப்பாறையில், 9; தக்கலையில், 8; கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில், 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கு எச்சரிக்கைகுமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு, 60 கி.மீ., வேகத்திலும், தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோர பகுதி, மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு, 55 கி.மீ., வேகத்திலும் சூறைக்காற்று வீசும்.மேலும், இப்பகுதிகளில் சூறைக்காற்றின் வேகம் மணிக்கு, 90 கி.மீ.,யாக அதிகரிக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


சென்னையில்...சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்துக்கு, வானம் மேகமூட்டமாக காணப்படும். நகரின் சில பகுதிகளில், இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 36 டிகிரி செல்ஷியசாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடைஅரபிக்கடலில் புயல் உருவாவதால், ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள், மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், மணிக்கு 40 முதல், 50 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசி, கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என்பதால், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும், விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.

*********************************


தொற்றை கட்டுப்படுத்த அரசு கிடுக்கிப்பிடி இறுகுகிறதுசென்னை : கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த, அரசின் பிடி இறுகுகிறது. ஏற்கனவே இருந்த தளர்வுகளை நீக்கி, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இன்று முதல் கடைகள் காலை, 10:00 மணி வரை மட்டுமே செயல்படும். மாவட்டங்களுக்கு உள்ளே, வெளியே செல்ல, 'இ- - பாஸ்' கட்டாயம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தினமும், 30 ஆயிரம் பேருக்கு மேல், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது, தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை, 1.83 லட்சமாக உள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, 10ம் தேதி முதல், 24ம் தேதி காலை, 4:00 மணி வரை, இரு வாரங்களுக்கு, மாநிலம் முழுதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.நேற்று முன்தினம் நடந்த, சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டத்தில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தீர்மானிக்கப்பட்டது.

நேற்று காலை, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது.
தலைமை செயலர் இறையன்பு, டி.ஜி.பி., திரிபாதி, உள்துறை செயலர் பிரபாகர், வருவாய் துறை செயலர் அதுல்யமிஸ்ரா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அந்தக் கூட்டத்தில், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:


புதிய கட்டுப்பாடுகள்:*தவிர்க்க முடியாத காரணங்கள் அடிப்படையில், இன்று காலை, 4:00 மணி முதல், 24ம் தேதி காலை, 4:00 மணி வரை, ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

*தனியாக செயல்படுகிற மளிகை, பல சரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும், 'ஏசி' வசதியின்றி, பகல், 12:00 வரை அனுமதிக்கப்பட்டிருந்தன. இந்தக் கடைகள் அனைத்தும் இனி காலை, 6:00 முதல், 10:00 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். ஒரே சமயத்தில், 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே, அனுமதிக்கப்பட வேண்டும்

* 'டன்சோ' போன்ற, மின் வணிக நிறுவனங்கள் வழியாக, மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் வினியோகம் செய்ய, காலை, 6:00 முதல், காலை, 10:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்

* மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது

* ஏ.டி.எம்., மையங்கள், பெட்ரோல், டீசல் பங்குகள், எப்போதும் போல செயல்படும்

* ஆங்கில மற்றும் நாட்டு மருந்து கடைகள் திறக்க, வழக்கம் போல் அனுமதிக்கப்படும்

* பொது மக்கள் தங்களுக்கு தேவையான, மளிகை, பலசரக்கு, காய்கறிகளை, வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்க வேண்டும். அவற்றை வாங்க, அதிக துாரம் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செல்பவர்கள் தடுக்கப்படுவர்

* காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள், பகல், 12:00 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்தன. இனி, அவை செயல்பட அனுமதி இல்லை

* டீக்கடைகள் பகல், 12:00 மணி வரை மட்டும் செயல்பட, அனுமதிக்கப்பட்ட நிலையில், இனிமேல் அவை இயங்க தடை விதிக்கப்படுகிறது

* மின் வணிக நிறுவனங்கள், பகல், 2:00 முதல், மாலை, 6:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்


இ- - பதிவு முறை* வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, தமிழகத்திற்கு வருவோருக்கு, இ- - பதிவு முறை கட்டாயமாக்கப்படும்

* அத்தியாவசிய பணிகளான, திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோர்களுக்கான தேவை போன்றவற்றுக்கு, மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையிலும், பயணம் மேற்கொள்ள, இ - பதிவு முறை கட்டாயமாக்கப்படும். முகவரி http://www.eregister.tnega.org/#/user/pass

* இ -- பதிவு முறை, 17ம் தேதி காலை, 6:00 மணி முதல் நடைமுறைக்கு வரும்.


இரவு ஊரடங்கு நீடிப்பு* ஏற்கனவே அறிவித்தபடி, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு, 10:00 முதல், காலை, 4:00 மணி முடிய, இரவு நேர ஊரடங்கு, தொடர்ந்து அமல்படுத்தப்படும்

* ஏற்கனவே அறிவித்தபடி, முழு ஊரடங்கு ஞாயிற்றுக் கிழமைகளில், 16, 23ம் தேதிகளில் அமல்படுத்தப்படும்

* மீன் மற்றும் இறைச்சி கடைகளில், பொது மக்கள் அதிகம் கூடுவதால், இந்தக் கடைகளை, பல்வேறு இடங்களுக்கு, பரவலாக மாற்றம் செய்ய, சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேணடும்

* ஏற்கனவே, நான் பல முறை வலியுறுத்தியபடி, ஊரடங்கு விதிமுறைகளை, பொது மக்கள் முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே, நோய் தொற்றினை கட்டுப்படுத்த முடியும்.

எனவே, அனைத்து சட்டசபை கட்சி தலைவர்கள் கூட்டத்தில் விவாதித்தபடி, காவல் துறையினர், தமிழகத்தில் முழு ஊரடங்கு முறையாக நடைமுறைப் படுத்தப்படுவதை உறுதி செய்ய, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


மக்களுக்கு வேண்டுகோள்!

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த, பொது மக்கள் நலன் கருதி, தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.கொரோனா மேலாண்மைக்கான, தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினியால்
சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொது மக்கள், உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி, மருத்துவமனை ஆலோசனை அல்லது சிகிச்சை பெற வேண்டும்.அரசின் முயற்சிகளுக்கு, பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viveka - Tirunelveli,இந்தியா
15-மே-202115:27:51 IST Report Abuse
Viveka பார்ப்பனரல்லாத ஆட்சியாம்.... அடேய் என்ன ஒரு கேவலமான ஜாதி வெறிடா.... இதில் உங்களுக்கு சமூக என்னும் போர்வை வேறு. பார்ப்பனர் வேண்டாம்னு தானடா தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அலைகிறீர்கள்... ஊழல் செய்து சொத்து சேர்க்கும் உங்களுக்கு RSS பற்றி என்னடா தெறியும்...? நீங்கள் ஆட்சிக்கு வந்ததே பார்ப்பன பிராசாந்த் கிஷோரின் காலைப் பிடித்தே... 7 நாளில் Degree படிச்சானுங்களாம்.... உங்கள் Degree லட்சணம் தான் தெறிகிறதே....முதலில் துண்டு சீட்டு இல்லாமல் பேச பழக சொல்லுங்க உபிஸ்... அப்புறமா Degree பத்தி யோசிக்கலாம்......
Rate this:
P.Narasimhan - Tirupattur, Tirupattur Dist,இந்தியா
15-மே-202119:48:11 IST Report Abuse
P.Narasimhanசெய்திக்கும் கமெண்ட்டுக்கும் என்ன சம்மந்தம்?...
Rate this:
Cancel
THANGARAJ - CHENNAI,இந்தியா
15-மே-202113:33:03 IST Report Abuse
THANGARAJ தமிழ் நாட்டில் ஊரடங்கு தீவிரப்படுத்த பட்டுள்ளது. மக்கள் அமைதியாக வீட்டில் இருக்கிறார்கள், மீடியா- டிவி, செய்தித்தாள், இன்டர்நெட் செய்திகள், சீரியல், சினிமா என அனைத்தையும் 2 - 3 நாட்கள் தடை செய்தால் கொரோன தீவிரம் / பயம் குறையும் தமிழ் நாட்டில் / இந்தியாவில் குறையும்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
15-மே-202113:10:38 IST Report Abuse
g.s,rajan மக்கள் எல்லாரும் ரொம்பக் கொதிச்சுப் போய் இருக்காங்க பைத்தியம் பிடிக்காத குறைதான் ரொம்ப மன உளைச்சலில் தவியா தவிக்கிறாங்க, ஒரு பக்கம் மக்கள் கையில காசு இல்ல வேலை இல்லை. தொழில் நடத்த முடியல நகர்ப் பேருந்து ,கிராமப்புறப் பேருந்து,தோலை தூர போக்குவரத்து இல்லாததால் ஒரு இடத்துல இருந்து ஒரு இடம் போக முடியல ,பெட்ரோல் டீசல் விலை தாறுமாறாக எகிறி வருவதால் போக்குவரத்துக்காக அதிக செலவு பண்ண முடியாத பண நெருக்கடியில் தவித்து வருகின்றனர் .நடுத்தர குடும்பங்களின் பாடோ திண்டாட்டம் எந்த செலவை செய்வது எந்த செலவை செய்வது என்ற பீதியில் குழப்பத்தில் அச்சத்தில் உறைந்து போய்க்கிடக்கின்றனர் .அரசாங்கம் பொதுமக்கள் வயிற்றுக்கு லாக் டவுன் போட முடியுமா,முடிந்தால் வயிற்றுக்கும் லாக் டவுன் போடட்டும் ,மக்களுக்கு பசி எடுக்காமல் இருக்க அரசாங்கம் முழு லாக் டவுன் போடமுடியுமா ??? ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X