நேபாள பிரதமராக சர்மா ஒலி பதவியேற்பு

Updated : மே 15, 2021 | Added : மே 15, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
காத்மாண்டு:நம் அண்டை நாடான நேபாளத்தின் பிரதமராக சர்மா ஒலி, நேற்று மீண்டும் பதவியேற்றார்.நேபாளத்தில், ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள், பிரதமர்சர்மா ஒலி மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசந்தா இடையே மோதல் அதிகரித்தது.அரசியல் குழப்பம் அதிகரித்த நிலையில், சமீபத்தில் பார்லிமென்டில் நம்பிக்கைஓட்டெடுப்பு நடந்தது. பிரதமர் ஒலி அரசு தோல்வி அடைந்தது. இதையடுத்து
  நேபாளம், பிரதமர், சர்மா ஒலி பதவி

காத்மாண்டு:நம் அண்டை நாடான நேபாளத்தின் பிரதமராக சர்மா ஒலி, நேற்று மீண்டும் பதவியேற்றார்.
நேபாளத்தில், ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்குள், பிரதமர்சர்மா ஒலி மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசந்தா இடையே மோதல் அதிகரித்தது.அரசியல் குழப்பம் அதிகரித்த நிலையில், சமீபத்தில் பார்லிமென்டில் நம்பிக்கைஓட்டெடுப்பு நடந்தது. பிரதமர் ஒலி அரசு தோல்வி அடைந்தது. இதையடுத்து சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.புதிய ஆட்சி அமைக்க, எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ்முயற்சித்தது. அந்த கட்சியால் பெரும்பான்மை ஆதரவை திரட்ட முடியவில்லை.


latest tamil newsஇதையடுத்து, பார்லி.,யில் அதிக உறுப்பினர்கள் உள்ள கட்சி என்ற முறையில் ஆட்சிஅமைக்க நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்கு, அதிபர் பண்டாரி அழைப்பு விடுத்தார். இதை ஏற்று, பிரதமராக சர்மா ஒலி நேற்று மீண்டும் பதவியேற்றார்.அவரது முந்தைய அரசில் அமைச்சர்களாக இருந்த 22 பேரும், மீண்டும் பதவியேற்றனர்.பிரதமர் சர்மா ஒலி 30 நாட்களுக்குள் பார்லி.,யில் பெரும்பான்மையை நிரூபிக்க,அதிபர் உத்தரவிட்டுள்ளார்.


சிறப்பு விமானங்களுக்கு அனுமதிகொரோனா பரவல் காரணமாக, தங்கள் நாட்டுக்கு வெளிநாட்டு விமானங்கள் வர, நேபாள அரசு தடைவிதித்துள்ளது. இதனால் நேபாளத்துக்கு சென்றுள்ள இந்தியர்கள் உட்பட 7,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்கள், நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.இதையடுத்து,வெளிநாட்டவர்களை அழைத்து செல்வதற்கு மட்டும் சிறப்பு விமானங்களை அனுமதிக்க, நேபாள அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manikandan - Kaliakavilai,. Kanyakumari District.,இந்தியா
15-மே-202111:50:29 IST Report Abuse
Manikandan Dear Sir, உங்களது செய்தி வாசிக்கும் போது இடையிடையே நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ketto வழியாக உதவித் தொகை அளிக்க சொல்கிறீா்கள. நல்ல விசயம் தான். ஆனால் உதவித்தொகை அளிக்க நாங்கள் முன் வரும்போது குறைந்த பட்ச தொகை Rs.1000, 1500 ஆக வருகிறது. இந்த தொகை வசதி படைத்தவா்கள் மட்டுமே அளிக்கமுடியும். எங்களை போல below poverty line ல் உள்ளவா்கள் உதவித்தொகை அளிக்க முடியவில்லை. ஆகையால் தினமலா் நாளிதழ் section ல் உள்ளவா்கள் குறைந்த பட்ச உதவித்தொகை Rs.100 and 200 கட்டுவதற்கு வசதி செய்து கொடுத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஏராளமான உதவித்தொகே கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு செய்ய முடியவில்லையென்றால் தயவு செய்து அந்த விளம்பரங்களை publish செய்யாதீா்கள். இவ்வாறு விளம்பரத்தை கண்டு நம்மால் உதவி செய்ய முடியவில்லையே என மனம் கணக்கிறது. So please take the neccessary step. Thankyou,
Rate this:
Cancel
Manikandan - Kaliakavilai,. Kanyakumari District.,இந்தியா
15-மே-202109:00:31 IST Report Abuse
Manikandan Ketto வில் help பண்ண amount அனுப்ப Rs.100, 200 அனுப்புமாறு நீங்கள் software set பண்ணிணால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கணிசமான உதவி கிடைக்கும்.
Rate this:
Cancel
Manikandan - Kaliakavilai,. Kanyakumari District.,இந்தியா
15-மே-202109:00:32 IST Report Abuse
Manikandan Ketto வில் help பண்ண amount அனுப்ப Rs.100, 200 அனுப்புமாறு நீங்கள் software set பண்ணிணால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கணிசமான உதவி கிடைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X