இந்தியாவில் 'ஸ்புட்னிக் - வி' ஒரு 'டோஸ்' ஊசி விலை ரூ.995

Updated : மே 16, 2021 | Added : மே 15, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி :ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 'ஸ்புட்னிக் - வி தடுப்பூசி, நம் நாட்டில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. முதல் தடுப்பூசி, 'கஸ்டம் பார்மா சர்வீஸ்' நிறுவன தலைவர் தீபக் சாப்ராவுக்கு நேற்று செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசியை ஒரு 'டோஸ்' 995 ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.நம் நாட்டில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடந்து
இந்தியா ,'ஸ்புட்னிக் - வி' ஒரு 'டோஸ்' ஊசி,ரூ.995

புதுடில்லி :ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 'ஸ்புட்னிக் - வி தடுப்பூசி, நம் நாட்டில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. முதல் தடுப்பூசி, 'கஸ்டம் பார்மா சர்வீஸ்' நிறுவன தலைவர் தீபக் சாப்ராவுக்கு நேற்று செலுத்தப்பட்டது. இந்த தடுப்பூசியை ஒரு 'டோஸ்' 995 ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


நம் நாட்டில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. 'கோவிஷீல்டு, கோவாக்சின்' ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.


அனுமதி



தெலுங்கானா தலைநகர் ஐதராபாதை தலைமையிடமாக வைத்து இயங்கும், 'டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ்' மருந்து தயாரிப்பு நிறுவனம், வேறு ஒரு முயற்சியை மேற்கொண்டது.ஆர்.டி.ஐ.எப்., எனப்படும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி அமைப்புடன் இணைந்து, ரஷ்யாவின் ஸ்புட்னிக் - வி கொரோனா தடுப்பூசி மருந்தை, இந்தியாவில் பரிசோதனை செய்து வினியோகிக்க ஒப்பந்தம் செய்தது.
இதைத் தொடர்ந்து ஸ்புட்னிக் - வி தடுப்பூசியை நம் நாட்டில் பயன்படுத்த, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது. ரஷ்யாவில் இருந்து தடுப்பூசிகள் இறக்குமதிசெய்யும் பணிகள் துவங்கப்பட்டன. இந்நிலையில் ஸ்புட்னிக் - வி தடுப்பூசியை இந்திய சந்தையில் டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ், நேற்று அறிமுகம் செய்து வைத்தது.
முதல் தடுப்பூசி 'கஸ்டம் பார்மா சர்வீஸ்' நிறுவன தலைவர் தீபக் சாப்ராவுக்கு நேற்று செலுத்தப்பட்டது.


விற்பனை



இந்த ஸ்புட்னிக் - வி தடுப்பூசியின் விலை குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டன. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இறக்குமதி செய்யப்பட்டுள்ள ஸ்புட்னிக் - வி தடுப்பூசியின் ஒரு டோஸ் 948 ரூபாய் மற்றும் 5 சதவீத ஜி.எஸ்.டி., வரி சேர்த்து 995.4 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.வரும் மாதங்களில் கூடுதல் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டதும், அதன் வினியோகத்தை இந்திய தயாரிப்பு நிறுவனங்கள் துவங்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
15-மே-202109:57:47 IST Report Abuse
vbs manian கோவிஷீல்டு கவாக்ஸின் குறித்து குய்யோ முறையோ என்றவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
15-மே-202108:52:57 IST Report Abuse
blocked user வியாபாரம் ஆரம்பித்து விட்டது.
Rate this:
Cancel
R Kumar - Triolet,மொரிஷியஸ்
15-மே-202107:49:20 IST Report Abuse
R Kumar விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவது அவசியம் . பணத்தை கொடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்ள எத்தனையோ பேர் தயாராக உள்ளனர் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X