தங்கள் நாட்டு மக்களை அழைத்து செல்ல சிறப்பு விமானம் அனுப்பியது ஆஸி.,

Updated : மே 15, 2021 | Added : மே 15, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மெல்போர்ன்: இந்தியாவில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை அழைத்துச் செல்ல, ஆஸ்திரேலிய அரசு, சிறப்பு விமானத்தை அனுப்பியுள்ளது.இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததால் ஆஸ்திரேலிய அரசு, பயணியர் விமான சேவையை நிறுத்தியுள்ளது. இதனால், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ஆஸி., கிரிக்கெட் வீரர்கள், வர்த்தகர்கள், சுற்றுலா பயணியர் உள்ளிட்டோர், நாடு

மெல்போர்ன்: இந்தியாவில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை அழைத்துச் செல்ல, ஆஸ்திரேலிய அரசு, சிறப்பு விமானத்தை அனுப்பியுள்ளது.



latest tamil news


இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததால் ஆஸ்திரேலிய அரசு, பயணியர் விமான சேவையை நிறுத்தியுள்ளது. இதனால், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்தியா வந்துள்ள ஆஸி., கிரிக்கெட் வீரர்கள், வர்த்தகர்கள், சுற்றுலா பயணியர் உள்ளிட்டோர், நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில், ஆஸி., வெளியுறவு அமைச்சர் மாரிசி பேய்ன் கூறியதாவது:இந்தியாவில் சிக்கியுள்ள ஆஸ்திரேலிய மக்களை மீட்க, சிறப்பு விமானம் டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏராளமான மருத்துவ பொருட்களையும் அனுப்பியுள்ளோம். இந்த விமானம் இந்தியாவில், ஆஸி., துாதரகத்தில் பயணத்திற்காக பதிவு செய்தவர்களை இன்று அழைத்து வரும்.இந்தியாவில் இருந்து புறப்படும் முன், அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.


latest tamil news


ஆஸ்திரேலியா வந்த பின், அவர்கள் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்படுவர். அடுத்த விமானம், வரும் 23ம் தேதி அனுப்பி வைக்கப்படும். இதுவரை இந்தியாவுக்கு, இரண்டு விமானங்களில், ஆக்சிஜன் செறிவூட்டிகள், 'வென்டிலேட்டர்'கள் உள்ளிட்ட, 15 டன் மருத்துவப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இயல்பு நிலை திரும்பிய பிறகே, வழக்கமான பயணியர் விமான சேவையை துவக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
15-மே-202108:18:44 IST Report Abuse
VENKATASUBRAMANIAN கேடி சகோதர்கள் இதில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று பார்ப்பார்கள்.
Rate this:
Cancel
15-மே-202105:46:40 IST Report Abuse
ஆப்பு வந்தே அவுஸ்திரேலியா...
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
15-மே-202103:32:49 IST Report Abuse
வெகுளி இது போன்ற உதவிகளை செய்ய கேடி சகோதரர்களும் தங்கள் விமானங்களை அரசிடம் ஒப்படைப்பார்களா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X