பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: மடத்தை பிடுங்காதீர்!

Updated : மே 15, 2021 | Added : மே 15, 2021 | கருத்துகள் (135)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'இடத்தை கொடுத்தால், மடத்தை பிடுங்குவர்' என்ற சொல்வழக்கு, தற்போது உண்மையாகியுள்ளது. வைணவத்தை வாழ்வித்த ராமானுஜரால், 1,000 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது, ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்க நாராயண மடம். இந்த மடத்தின்,
ithu, ungal idam, இது, உங்கள், இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'இடத்தை கொடுத்தால், மடத்தை பிடுங்குவர்' என்ற சொல்வழக்கு, தற்போது உண்மையாகியுள்ளது. வைணவத்தை வாழ்வித்த ராமானுஜரால், 1,000 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது, ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்க நாராயண மடம். இந்த மடத்தின், 50-வது பட்டத்தை ஏற்றிருந்த, ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள், 2018-ல் மறைந்ததை அடுத்து, மூன்று ஆண்டுகளாக இந்த மடத்திற்கு, அடுத்த ஜீயர் நியமிக்கப்படவில்லை.இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம், புதிய ஜீயரை தேர்வு செய்வதற்கான விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

ஏதோ ஒரு அலுவலகத்தில் காலியான அலுவலக உதவியாளர் பணிக்கு தரப்படும் விளம்பரம் போல, ஜீயரை தேர்வு செய்ய தரப்பட்டுள்ள விளம்பரம் அதிர்ச்சியாகவும், வேடிக்கையாகவும் உள்ளது. கடந்த 2018ல், 50-வது பட்டம் ஜீயர் மறைந்த பின், இரண்டு ஆண்டுகளாக, புது ஜீயரை நியமிக்காமல், மடத்தை சார்ந்தோர் மவுனம் காத்தது ஏன்?இதனால் தானே, அரசியல்வாதிகள் ஆன்மிகத்திலும் மூக்கை நுழைக்கின்றனர். உடனடியாக புது ஜீயர் நியமிக்கப்பட்டிருந்தால், இந்த பிரச்னைக்கு இடமில்லாமல் போயிருக்கும்.

சில மடங்களில் உள்ள நடைமுறை போல, ஒரு ஜீயர் இருக்கும் போதே, அடுத்த பட்டத்துக்கான சீடரை தேர்ந்தெடுத்துவிட்டால், அரசியல் குறுக்கீடு இருக்காதல்லவா?காலியாக உள்ள ஜீயர் பதவிக்கு, 20 பேர் விண்ணப்பித்தால், யாரை தேர்வு செய்வது என்பதில் அரசியலும், பணமும் புகுந்து விளையாடும். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜீயர், இறைவனுக்கு அடியவராய் எப்படி இருப்பார்? நிச்சயம் அரசியல்வாதிக்கு அடிமையாகத் தான் இருப்பார்.தி.மு.க., ஏற்கனவே ஆட்சியில் இருந்த போது, பல கோவில்களின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டன. அது, மீண்டும் தலையெடுத்துள்ளதோ என, அச்சமாக உள்ளது.


latest tamil news


இந்த மாதிரியான ஜீயர் நியமனம், இதற்கு முன்னாலும் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி நடந்திருந்தால், அது துரதிருஷ்டவசமானது. அந்த தவறு மீண்டும் நடக்காமல், புதிதாக ஆட்சி அமைத்துள்ள தி.மு.க., அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.தாங்கள், ஹிந்து விரோதிகள் இல்லை என, தேர்தலுக்கு முன்னால் சொன்ன ஸ்டாலின், அதை தற்போது மெய்ப்பித்து காட்ட வேண்டும். ஆன்மிகத்தில் அரசியல் குறுக்கிடாமல், முதல்வர் ஸ்டாலின் பார்த்துக் கொள்ள வேண்டும்.'தி.மு.க.,வினருக்கு இடம் கொடுத்தோம்; அதனால் இன்று, மடத்தையே பிடுங்குகின்றனர்' என, பக்தர்கள் நினைக்கும்படி செய்து விடாதீர்.

Advertisement
வாசகர் கருத்து (135)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-மே-202123:32:12 IST Report Abuse
Pugazh V //வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா 15-மே-2021 17:08 நீ நிச்சயம் வைணவன் கிடையாது// ஆமாம் நான் வைஷ்ணவா அல்லன். நான் கௌடில்ய கோத்திர பிராமணன். வடகலையும் அல்ல தென்கலையும் அல்ல. அய்யங்காரும் அல்ல. ஆனால் ஶ்ரீரங்கம் கோவிலுக்குப் பலமுறை சென்று தரிசனம் செய்து பெருமாளின் அருளும் ஆசியும் பெற்றிருக்கிறேன். எங்களவா பக்கத்துல ஜீயர் பட்டாச்சார்யர்கள் னு யாரும் கிடையாது. கோவில் கார்யங்கள்ளாம் பூஜை பண்றவா, சாதாரணமா ஆறு பேர் வரைக்கும் இருப்பா..அவாளே பாத்துப்பா.
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
16-மே-202112:34:36 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுஅட பிராம்மண பாஷையில் சொல்லிட்டேல் அப்போ பக்காவா விசு Iyer மாதிரி நீங்களும் ஒரு அய்யர் என்று நாங்கள் நம்பிட்டோம்...
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-மே-202123:24:30 IST Report Abuse
Pugazh V C SRIRAM - CHENNAI : நான் எழுப்பி இருப்பது குதர்க்கக் கேள்விகள் அல்ல. உங்களுக்கான விளக்கம் : 1. மாற்று மதங்களில் - எதிலும் ஜீயர் என்ற பதவி கிடையாது. 2. மாற்று மதங்களின் ஆலயங்களில் அரசு சம்பளம் வாங்கும் அலுவலக பதவியில் யாரும் இல்லை. 3. மாற்று மத ஆலயங்களில் புனரமைப்புப் பணிகள் செய்வது அரசு அல்ல. ஒனது கேள்விகளுக்கான விளக்கம் உங்கள் நிலைமையைப் போலவே மற்ற யாரிடமும் எந்த விளக்கமும் இல்லை. எனவே தான் பிற மதங்களை மேற்கோள் காட்டி எதையோ எழுதுகிறீர்கள்.
Rate this:
Cancel
வணங்காமுடி திராவிடன் - அஞ்சாமை திராவிடர் உடமையடா ,இந்தியா
15-மே-202121:13:43 IST Report Abuse
வணங்காமுடி திராவிடன் கேடுகெட்ட அரசியல்வாதிகள் தலையிடாமல் இருந்திருந்தால், அயோத்தி அமைதியாகவும் அழகாகவும் இருந்திருக்கும். அவர்களுக்குள் ஒற்றுமையாக இருந்திருப்பார்கள்.குட்டையை குழப்புவர்கள் தான் மீன்பிடிக்க குழப்பி விட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X