அரவிந்த் கெஜ்ரிவால் மீது பா.ஜ., பரபரப்பு புகார்

Updated : மே 15, 2021 | Added : மே 15, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
புதுடில்லி: 'ஆக்சிஜன் பற்றாக்குறையால் டில்லியின் இரு மருத்துவமனைகளில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு, அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் அலட்சியமே காரணம்' என, பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது.டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மற்றும் பத்ரா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, 33

புதுடில்லி: 'ஆக்சிஜன் பற்றாக்குறையால் டில்லியின் இரு மருத்துவமனைகளில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு, அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் அலட்சியமே காரணம்' என, பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது.latest tamil news


டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மற்றும் பத்ரா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, 33 கொரோனா நோயாளிகள் சமீபத்தில் உயிரிழந்தனர்.

இது குறித்து, பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:டில்லி அரசிடம், திரவ மருத்துவ ஆக்சிஜன்களை சேமித்து வைக்கக்கூடிய வசதி, போதுமான அளவில் இல்லை. இதனால், பலமுறை அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஆக்சிஜன்களை திருப்பி அளித்துள்ளனர். இதை, 'பெசோ' எனப்படும், பெட்ரோலியம் மற்றும் வெடி பொருட்கள் பாதுகாப்பு அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தி உள்ளது.


latest tamil news


டில்லியில் தற்போது ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்கு, டில்லி அரசின் திட்டமிடலில் இருந்த குறைபாடே காரணம். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் திறமையின்மை இப்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இதற்கு துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பதில் அளித்து, மன்னிப்பும் கோருவார் என எதிர்பார்க்கிறேன்.ஹரியானாவின் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து டில்லிக்கு, 120 டன் ஆக்சிஜன் சமீபத்தில் வினியோகிக்கப்பட்டது. சேகரித்து வைக்க இடவசதி இல்லை என கூறி, 74 டன் ஆக்சிஜனை டில்லி அரசு திரும்ப அனுப்பிவிட்டது.

டில்லியில் 30க்கும் மேற்பட்ட நோயாளிகள் சமீபத்தில் உயிரிழந்த இரு மருத்துவமனைகளும், ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து டில்லி அரசிடம் முறையிட்டும், எந்த பலனும் இல்லை. இந்த உயிரிழப்புகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
15-மே-202117:57:46 IST Report Abuse
Endrum Indian இவன் ஐ ஐ டியின் அவமானச்சின்னம் 1% கூட அறிவென்பதே இல்லை வெறும் இன்னொருவரை குறை சொல்லியே வாழ்கின்றான்
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
15-மே-202117:11:19 IST Report Abuse
Suppan ஸ்டாலினால் தலை குனிந்த தமிழகமே வக்ஸினேஷன் ஆரம்பித்தபொழுது இந்த உருப்படாத எதிர்க்கட்சிகள் என்னவெல்லாம் சொன்னார்கள். "அவசரப்பட்டு அனுமதி கொடுத்துவிட்டது அரசு" இது "பி ஜெ பி" வாக்ஸின் சங்கி வாக்ஸின். இதைப் போட்டுக் கொண்டால் பி ஜெ பி ஆதரவாளர் ஆகிவிடுவீர்கள். ஒரு சாது இதற்கு மேலே போய் வாக்ஸினில் சாத்தான் உள்ளது. தமிழ்நாட்டில் முன்களப் பணியாளர்களே முன்னுக்கு வரவில்லை. எவ்வளவு டோஸ்களை வீ ணடித்தனர்?. ஆஸ்டராஸினகாவுடனான ஒப்பந்தப்படி ஏற்றுமதி செய்தாக வேண்டிய நிர்பந்தம். இதுவரை 18 கோடிக்கு மேல் ஊசி போடப்பட்டுள்ளது. ஏற்றுமதி ஆனது இலவசங்கள் உட்பட ஆறு கோடி. ஆக இந்த ஸ்டாலின் குஞ்சு இதை 84% என்கிறதே . தலைவனின் கணக்கு அறிவு இவரையும் பாதித்து விட்டது. பாவம் விட்டுவிடுங்கள் .
Rate this:
Cancel
மன்னிப்பு - Madurai,இந்தியா
15-மே-202116:53:27 IST Report Abuse
மன்னிப்பு மொகலாயர்களும்,கிறிஸ்துவர்களும் இந்தியாவை எப்படி வென்றார்கள். ஆன்மீக இந்தியா ஏன் தோற்றது? அப்படிதான் திராவிடத்தின் வெற்றியும் தமிழகத்தில் மட்டும். ஏன் திராவிடம் பிற திராவிடர்கள் என்று சொல்லக்கூடிய மாநிலங்களில் வெல்ல முடியவில்லை? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X