கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கமல் போட்டியிட்ட கோவை தெற்கில் மறுஓட்டு எண்ணிக்கை கோரி வழக்கு

Updated : மே 15, 2021 | Added : மே 15, 2021 | கருத்துகள் (48)
Share
Advertisement
சென்னை : கோவை தெற்கு தொகுதியில், மறுஓட்டு எண்ணிக்கை நடத்தக்கோரி, சுயேச்சை வேட்பாளர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில், பா.ஜ., சார்பில் வானதி சீனிவாசன்; மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல் போட்டியிட்டனர். இதில், வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். அதே தொகுதியில் போட்டியிட்ட, கோவை பி.என்.புதுாரைச் சேர்ந்த
Kamal, Vanathi, Coimbatore South, Kamal Haasan, Vanathi Srinivasan

சென்னை : கோவை தெற்கு தொகுதியில், மறுஓட்டு எண்ணிக்கை நடத்தக்கோரி, சுயேச்சை வேட்பாளர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில், பா.ஜ., சார்பில் வானதி சீனிவாசன்; மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல் போட்டியிட்டனர். இதில், வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். அதே தொகுதியில் போட்டியிட்ட, கோவை பி.என்.புதுாரைச் சேர்ந்த ராகுல் காந்தி என்பவர் தாக்கல் செய்த மனு:ஹிந்துஸ்தான் ஜனதா கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளேன்.

பா.ஜ., சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், 53 ஆயிரத்து, 209 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றி சந்தேகமாக உள்ளது. தொகுதி வாக்காளர்களில் பெரும்பாலோர், பா.ஜ.,வுக்கு எதிராக இருந்தனர். பிரசாரத்தின் போது, அது தெரிந்தது. எனக்கு, 73 ஓட்டுக்கள் மட்டுமே விழுந்ததாக கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. நான் உள்ளிட்ட சில சுயேச்சை வேட்பாளர்கள், அதே தொகுதியை சேர்ந்தவர்கள். உறவினர்கள், நண்பர்கள் என, பார்த்தாலும், 1,000 ஓட்டுக்களாவது கிடைத்திருக்கும்.


latest tamil news



ஓட்டு எண்ணிக்கையின் போது, முறைகேடுகள் நடந்துள்ளன. எங்களுக்கு விழுந்த ஓட்டுக்கள், பா.ஜ.,வுக்கு மாற்றப்பட்டுள்ளன.ஓட்டு எண்ணிக்கையில் நடந்த மோசடி குறித்து, கலெக்டருக்கு மனு அனுப்பினேன். மறுஓட்டு எண்ணிக்கை நடத்தக் கோரி, தேர்தல் அதிகாரிக்கு மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் இல்லை.எனவே, என் மனுவை பரிசீலிக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த நடவடிக்கை எடுக்கும்படி, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
19-மே-202120:56:26 IST Report Abuse
bal தமிழ் நாடு முழுவதும் திருப்பி என்ணுணங்க
Rate this:
Cancel
vijay - coimbatore,இந்தியா
19-மே-202107:43:39 IST Report Abuse
vijay பேரை மாத்திருந்தா ஒருவேளை இவருக்கு வோட்டு நிறைய கிடைத்திருக்குமா என்னவோ
Rate this:
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
18-மே-202119:56:05 IST Report Abuse
KavikumarRam அப்படின்னா தமிழ்நாடு முழுசும் மறுபடியும் ஒட்டு எண்ணிக்கை செய்யவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X