11,700 பேரின் உயிரை காத்த தடுப்பூசி

Updated : மே 15, 2021 | Added : மே 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
லண்டன் : பிரிட்டன் தடுப்பூசியால் 11 ஆயிரத்து 700 பேரின் உயிர் காக்கப்பட்டுள்ளது.கொரோனாவின் பிடியில் இருந்து தப்ப தடுப்பூசி செலுத்துவது அவசியம். இதனை உணர்ந்த ஐரோப்பிய நாடான பிரிட்டன், தடுப்பூசி பணியில் தீவிரமாக இறங்கியது. பைசர், ஆக்ஸ்போர்டு - ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதன் காரணமாக 70 சதவீத தொற்று குறைந்தது. மரணங்கள், கடுமையான பாதிப்புகள் தடுக்கப்பட்டன.
pfizer, Oxford Astrazeneca, Corona Vaccine, UK, Covid dead

லண்டன் : பிரிட்டன் தடுப்பூசியால் 11 ஆயிரத்து 700 பேரின் உயிர் காக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் பிடியில் இருந்து தப்ப தடுப்பூசி செலுத்துவது அவசியம். இதனை உணர்ந்த ஐரோப்பிய நாடான பிரிட்டன், தடுப்பூசி பணியில் தீவிரமாக இறங்கியது. பைசர், ஆக்ஸ்போர்டு - ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதன் காரணமாக 70 சதவீத தொற்று குறைந்தது. மரணங்கள், கடுமையான பாதிப்புகள் தடுக்கப்பட்டன. தடுப்பூசியின் பலன், தடுக்கப்பட்ட மரணங்கள் பற்றி பிரிட்டன் பொது சுகாதார துறை ஆய்வு மேற்கொண்டது.

கடந்த ஏப்ரல் இறுதி வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 11 ஆயிரத்து 700 மரணங்களும், 33 ஆயிரம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் தடுக்கப்பட்டது தெரிய வந்தது.


latest tamil news


பிரிட்டன் சுகாதாரச் செயலர் மாட் ஹன்காக் கூறுகையில், ''கொரோனாவால் 70 - 80 வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். தடுப்பூசிக்கு பின் நிலைமை மாறியது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதே வாழ்நாளின் முக்கியமான பணி,'' என்றார்.

நோய் தடுப்பு பிரிவு தலைவர் டாக்டர் ராம்சே கூறுகையில், ''தடுப்பூசியே உயிரை பாதுகாக்கும். ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றியுள்ளோம். கொரோனா பரவலையும் கட்டுப்படுத்தியுள்ளோம். இரண்டு, 'டோஸ்' எடுத்துக் கொள்வது அவசியம்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
15-மே-202114:58:14 IST Report Abuse
Vena Suna Developed Countries want to dump their products here...most of them may have Placebo effect
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X