பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2,000 நிவாரணம் வினியோகம் துவங்கியது

Updated : மே 15, 2021 | Added : மே 15, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
சென்னை : தமிழக அரசு அறிவித்தபடி, ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா ஊரடங்கு கால நிவாரணத்தின் முதல் தவணையான, 2,000 ரூபாய், இன்று முதல் வழங்கப்பட்டது.முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், 2.07 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கும், கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக, தலா, 4,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார். அந்தத் தொகை, இரண்டு தவணையாக வழங்கப்பட உள்ளது. அதில் முதல் தவணையான, 2,000 ரூபாய்
 ரூ2000,நிவாரணம்,வினியோகம்

சென்னை : தமிழக அரசு அறிவித்தபடி, ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு, கொரோனா ஊரடங்கு கால நிவாரணத்தின் முதல் தவணையான, 2,000 ரூபாய், இன்று முதல் வழங்கப்பட்டது.

முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், 2.07 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கும், கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக, தலா, 4,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டார். அந்தத் தொகை, இரண்டு தவணையாக வழங்கப்பட உள்ளது. அதில் முதல் தவணையான, 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, சென்னை தலைமை செயலகத்தில், 10ம் தேதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்; 15ம் தேதி முதல், ரேஷன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களுக்கு பணம் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.


latest tamil news


இதற்காக, 4,153 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் தவணை நிவாரண தொகை வழங்கும் பணி, ரேஷன் கடைகளில், இன்று காலை, 8:00 மணிக்கு துவங்கியது. மதியம், 12:00 மணி வரை வழங்கப்படும். அடுத்த ஒரு வாரத்திற்கு நிவாரண தொகை வழங்கப்படும். ரேஷன் கடைகளில் கூட்டம் சேருவதை தடுக்க, சமூக இடைவெளியை பின்பற்றி, தினமும் தலா, ஒரு கடையில், 200 கார்டுதாரர்களுக்கு மட்டும் நிவாரண தொகை வழங்கப்படுகிறது.

இதற்காக, கடைகளுக்கு எந்த தேதி, நேரத்திற்கு வர வேண்டும் என்ற விபரங்கள் அடங்கிய டோக்கன்களை ரேஷன் ஊழியர்கள்,கார்டுதாரர்களின் வீடுகளில் முன்கூட்டியே வழங்கியுள்ளனர். ரேஷன் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதுடன், நிவாரண தொகை வழங்கும்பணியை உன்னிப்பாக கண்காணிக்குமாறு, மாவட்ட கலெக்டர்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.

இரண்டாம் தவணை நிவாரண தொகை, அடுத்தமாதம் வழங்கப்பட உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
15-மே-202119:34:13 IST Report Abuse
sankaranarayanan தமிழக அரசு அறிவித்தபடி, ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கும், மற்ற எல்லா கார்டுதாரகளுக்கும் கொரோனா ஊரடங்கு கால நிவாரணத்தின் முதல் தவணையான, 2,000 ரூபாய், இன்று முதல் வழங்கப்பட்டது. இந்த பணத்தை முறையாக நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் சேர்த்துவிட்டால் நல்லதாக இருக்கும். இதற்கு இந்த அரசு உடனே அரசாணை இட்டால் நல்லது. மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்கலாம். ரேஷன் கடை ஊழியர்களும் மற்ற வேலைகளை ப்பார்க்கலாம். கொரோனா பரவுதல் ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்படும். நடுவில் புரோக்கர்கள் தலையிலிடும் இருக்காது. ஆதார் கார்டுடன் வங்கி க்கணக்கு சேர்த்து இருப்பது நடைமுறையில் இருப்பதால் இதை நடைமுறை படுத்தவதில் எந்த கஷ்டமும் இருக்காது. முதல்வரே தலையிட்டு உடனே அமல்படுத்தவும்.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
16-மே-202101:19:59 IST Report Abuse
தல புராணம்வங்கிக்கணக்கு இல்லாமல் இருக்கும் ஏழைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அப்புறம் ஊரடங்கு, வங்கிக்கு சென்று பணம் எடுக்கணும்.. அப்புறம் வங்கி வாசலில் கூட்டம் வரும்.. எல்லாரும் உங்களை போல, வீட்டில் கார், மோட்டார் பைக், கணினி, இன்டர்நெட் வசதி, மொபைல் ஸ்மார்ட் போன், ஆன்லைன் ஆர்டரில் சாப்பாடு ஆர்டர் பண்ணி சாப்பிடும் "வசதியான" ஏழைகள் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.. உங்க மோடி ஐயாவுக்கும், அவருடைய கார்ப்பரேட் கூட்டத்துக்கும் இதை காதில் ஓதுங்கள்.....
Rate this:
Cancel
R chandar - chennai,இந்தியா
15-மே-202118:28:28 IST Report Abuse
R chandar The amount of relief should be for all ration card holder whether rice or sugar card, only thing this benefit is reaching even the government staff who possess rice card. Criteria defined like rice and sugar card is not correct . Almost Every family is affected by this pandemic by way of many difficulties by spending more money for lab testing ,and medical support , since it is pandemic support it should be for all , this can be credited directly to the bank account in which aadhar card linked to ration card and bank account to avoid crowd.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
15-மே-202117:16:35 IST Report Abuse
sankar இந்த பணத்தை வங்கியில் போடுவதில் என்ன பிரச்சினை - காஸ் மானியம் மற்றும் மத்திய அரசு மானியங்கள் வங்கியில்தானே செலுத்தப்படுகிறது - சில்லறைகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X