'ட்ரோன்' அத்துமீறல்; ஆயுதங்கள் பறிமுதல்

Updated : மே 15, 2021 | Added : மே 15, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் ஆள் இல்லா உளவு விமானங்களில் இருந்து போடப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதிக்குள், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து, 'ட்ரோன்'கள் எனப்படும், ஆளில்லா சிறிய வகை விமானங்கள், அத்துமீறி நுழையும் சம்பவங்கள் சமீப காலமாக தொடர்ந்து நடக்கின்றன.இந்நிலையில்,

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் ஆள் இல்லா உளவு விமானங்களில் இருந்து போடப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



latest tamil news


ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதிக்குள், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து, 'ட்ரோன்'கள் எனப்படும், ஆளில்லா சிறிய வகை விமானங்கள், அத்துமீறி நுழையும் சம்பவங்கள் சமீப காலமாக தொடர்ந்து நடக்கின்றன.இந்நிலையில், அதுபோன்ற ஒரு சம்பவம், தற்போது மீண்டும் அரங்கேறி உள்ளது.


latest tamil news


இது குறித்து பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஜம்மு - காஷ்மீரின் சம்பா மாவட்ட எல்லைப் பகுதியில், மஞ்சள் நிற கவரில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன.அதனுடன், ட்ரோன்களில் எடைகளை தாங்க பொருத்தப்பட்டிருக்கும் மரச்சட்டமும் கண்டெடுக்கப்பட்டது.

இதன் வாயிலாக, ட்ரோன் உதவியுடன் இந்த ஆயுதங்கள், அந்த பகுதியில் போடப்பட்டிருப்பது உறுதியாகிறது. இந்த ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, பாகிஸ்தான் எல்லைக்குள், அந்த ட்ரோன் மீண்டும் சென்றிருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sudharman - chennai,இந்தியா
15-மே-202110:47:12 IST Report Abuse
sudharman ட்ரான் வந்த பொழுது நாம் கண்டு பிடிக்க இயலவில்லையே. வந்து ஆயுதங்களை போட்ட பின்னர் தான் நாம் கண்டுபிடித்துள்ளோம். நாம் இன்னும் தொழில் நுட்பத்தில் முன்னேற வேண்டும். வந்த உடன் சுட்டு வீழ்த்தும் திறமையும் தொழில்நுட்பமும் வேண்டும்.
Rate this:
Cancel
BALOU - st-denis,பிரான்ஸ்
15-மே-202109:37:06 IST Report Abuse
BALOU இந்தியா பதிலுக்கு பலுச்சிஸ்தான் போராடடகாரர்களுக்கு ஆயுத உதவி செய்தால்தான் இவர்கள் அடங்குவார்கள் .பாகிஸ்தான் என்றுமே நமக்கு நண்பனாக இருக்க முடியாது
Rate this:
Cancel
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
15-மே-202108:52:28 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ பாக்கிஸ்தான் என்ற சிறிய நாடு இந்தியா என்ற பெரிய நாட்டின் மீது இதுபோல ட்ரோன் போன்றவற்றை உபயோகித்து மறைமுகப்போர் நடத்துகிறது, இந்தியாவால் அதுபோல் மறைமுகப் போர் நடத்த இயலாதா என்ற கேள்வி எழும், அதற்கு விடை, இந்தியாவில் மட்டுமே நாம் துரோகிகளையும் தேச விரோதிகளையும் சலுகைகள் கொடுத்து நமக்கே குடைச்சல் கொடுத்தாலும் பாதுகாத்துவருகிறோம், மற்ற நாடுகளில் அது இல்லை, பாக்கிஸ்தான் முழுதும் தீவிரவாதிகள் நிறைந்திருக்கலாம், ஆனால் தேசதுரோகி யாரும் இல்லை, எனவேதான் அவர்களால் இந்தியாவில் மறைமுக யுத்தம் 70 ஆண்டுகளாக நடத்தமுடிகிறது, நம்மால் ஒரு உள்நாட்டு தேச துரோகியைக்கூட 70ஆண்டுகளாக தண்டிக்ககூட இயலவில்லை,
Rate this:
Naresh Giridhar - Chennai,இந்தியா
15-மே-202111:46:26 IST Report Abuse
Naresh Giridharஅப்போ நமது படை வீரர்களையா சந்தேகப்படுகிறீர் ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X