சென்ட்ரல் விஸ்தா திட்டம் தேவையா? கே.எஸ்.அழகிரி கேள்வி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்ட்ரல் விஸ்தா திட்டம் தேவையா? கே.எஸ்.அழகிரி கேள்வி

Updated : மே 15, 2021 | Added : மே 15, 2021 | கருத்துகள் (80)
Share
சென்னை : 'கொத்து, கொத்தாக, மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்து வரும் போது, சென்ட்ரல் விஸ்தா திட்டம் தேவையா? என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை: கடந்த, 15 மாதங்களில், துவக்கத்தில் கொரோனாவின் முதல் அலையை எதிர்கொண்டோம். அப்போது, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். இரண்டாவது அலையின் போது, குடும்பத்தை காப்பாற்றக்
PM house, Delhi Central Vista, KS Alagiri, Congress

சென்னை : 'கொத்து, கொத்தாக, மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்து வரும் போது, சென்ட்ரல் விஸ்தா திட்டம் தேவையா? என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை: கடந்த, 15 மாதங்களில், துவக்கத்தில் கொரோனாவின் முதல் அலையை எதிர்கொண்டோம். அப்போது, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். இரண்டாவது அலையின் போது, குடும்பத்தை காப்பாற்றக் கூடிய இளைஞர்கள் பாதிப்புக்கு உள்ளாகி, உயிரிழந்து வருகின்றனர். இரண்டாவது அலை குறித்து, நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கைக்கு மதிப்பு அளிக்கப்படவில்லை.


latest tamil news



கொரோனாவுக்கு எதிரான போரில், இந்தியா வெற்றி பெற்று விட்டதாக, பிரதமர் மோடி தம்பட்டம் அடித்து, தேர்தல் பிரசாரம் செய்தார். கொத்து கொத்தாக மக்கள், தங்கள் இன்னுயிரை இழந்து வரும் போது, 13 ஆயிரம் கோடி ரூபாயில் வீடு அவசியமா; 20 ஆயிரம் ரூபாய் கோடி செலவில், பார்லிமென்ட் கட்டடம் உள்ளிட்ட, சென்ட்ரல் விஸ்தா திட்டம் தேவையா?

மத்திய அரசின் ஏதேச்சதிகாரப் போக்கால், கொரோனா நடவடிக்கையில், உறுதியற்ற நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது, மிகவும் ஆபத்தான பேரழிவுக்கு வழிவகுக்கும்.இவ்வாறு, அழகிரி கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X