சென்னை : 'அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மீண்டும் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதம்: தி.மு.க. சார்பில் 'ஒன்றிணைவோம் வா' செயல் திட்டத்தை மீண்டும் துவக்கி மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ள வேண்டும். எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் கட்சியினர் களப்பணியாற்றி இந்த பேரிடர் நேரத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.

கொரோனாவிலிருந்து தமிழகத்தை மீட்க மக்கள் இயக்கமாகச் செயல்படுவோம். குறிப்பாக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய காலக்கட்டம் இது.
தி.மு.க.வினர் எப்போதும் போல களப் பணியாற்றுவதுடன் நம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை காரணமாக கூடுதல் பொறுப்புடனும் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் பேரிடர் காலத்தில் பொது மக்களுக்கு உதவிட வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE