பொது செய்தி

இந்தியா

ஒரு மாதத்துக்கு பதிலாக 28 நாட்கள்: தொலைபேசி கட்டண அதிருப்தி

Updated : மே 15, 2021 | Added : மே 15, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
புதுடில்லி: தொலைதொடர்பு நிறுவனங்கள், அவற்றின் கட்டணங்களுக்கான நாட்களை நிர்ணயிப்பது சம்பந்தமாக நுகர்வோரிடமிருந்து புகார்கள் வருவதை அடுத்து, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' இது குறித்து ஆலோசனை நடத்த உள்ளது.நிறுவனங்கள், தங்களுடைய தொலைபேசி கட்டணத்தை, ஒரு மாதத்துக்கு இவ்வளவு என்று நிர்ணயிக்காமல், 28 நாட்களுக்கு இவ்வளவு என்றே தெரிவிக்கின்றனர்.இது
MobileRecharge, Pack, 28Days, Instead of, 30Days, TRAI, மொபைல், ரீசார்ஜ், கட்டணம், 28 நாட்கள், டிராய்

புதுடில்லி: தொலைதொடர்பு நிறுவனங்கள், அவற்றின் கட்டணங்களுக்கான நாட்களை நிர்ணயிப்பது சம்பந்தமாக நுகர்வோரிடமிருந்து புகார்கள் வருவதை அடுத்து, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' இது குறித்து ஆலோசனை நடத்த உள்ளது.

நிறுவனங்கள், தங்களுடைய தொலைபேசி கட்டணத்தை, ஒரு மாதத்துக்கு இவ்வளவு என்று நிர்ணயிக்காமல், 28 நாட்களுக்கு இவ்வளவு என்றே தெரிவிக்கின்றனர்.இது ஒருவகையில், தங்களை மோசடி செய்வ தாக இருக்கிறது என, நுகர்வோர்களில் பெரும்பாலானோர் கருதுகின்றனர். இது குறித்து பல புகார்களை டிராய் பெற்றுள்ளது.


ஆலோசனை


இதையடுத்து, இது குறித்த கருத்துகளையும் ஆலோசனைகளையும் அறிய டிராய் முன்வந்து உள்ளது. பங்குதாரர்கள், பொதுமக்கள், துறையினர் ஆகியோர் தங்கள் கருத்து களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளது.

இது குறித்து டிராய் தெரிவித்துள்ளதாவது:தொலைதொடர்பு நிறுவனங்களின் சில வகை கட்டணங்கள் குறித்து நுகர்வோர் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். எனவே நுகர்வோருடைய தேவையை திருப்திபடுத்தும் வகையில், கட்டண விபரங்களை அமைக்க டிராய் விரும்புகிறது.சேவையை பயன்படுத்திய பின், கட்டணம் செலுத்தும், 'போஸ்ட் பெய்டு' வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அது 28, 29, 30 அல்லது 31 நாட்களாக இருந்தாலும், மாதாந்திர அடிப்படையில் வசூலிக்கப்படுகிறது. ஆனால், 'பிரீபெய்டு' திட்டத்தில், நாட்கள் அல்லது வாரங்களின் அடிப்படையிலும் சேவை வழங்கப்படுகிறது.


latest tamil news



13 முறை ரீசார்ஜ்


இருப்பினும் மாதாந்திரத்துக்கு, 28 நாட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு, 12 முறைக்கு பதிலாக, 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டியதிருப்பதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். எனவே, நிறுவனங்கள் கட்டணங்களை, ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு குறிப்பிட்ட நாள் என எடுத்துக் கொள்ள இருக்கிறதா அல்லது தனித்தனியாக, 28, 29, 30, 31 நாட்களுக்கு வழங்க இருக்கிறதா என்பதையும் அறிய வேண்டும்.

எனவே, இது குறித்த கருத்துகளை, நிறுவனங்கள் ஜூன் 11ம் தேதிக்குள் வழங்க வேண்டும். அதன் மீதான மாற்றுக் கருத்துகளை, ஜூன் 25ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு டிராய் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - chennai,இந்தியா
21-மே-202104:44:49 IST Report Abuse
Indian இது என்ன பிரமாதம் , விலை கூட்டாமலேயே பழைய விலையிலேயே உங்களுக்கு புதிய சேவை பண்ணறோமே . இவர்களே போட்டியை உருவாக்குவார்கள் அதில் ஒரு மிக எளிமையான ஒருவரையும் காண்பித்து புது வியாபார யுக்தியை கையாள்வார்கள் கொஞ்ச நாட்கள் பிறகு எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கப்படும் . மொத்தத்தில் பயனாளி மட்டுமே ஏமாளி
Rate this:
Cancel
srinivasan subramanian - Dublin CA,யூ.எஸ்.ஏ
16-மே-202107:05:45 IST Report Abuse
srinivasan subramanian பபிஸ்னல் தன இசையாக நியமித்த குறைவான வேலிடிட்டி நாட்களிலும் ஒரு நாளை குறைத்து விடுகிறது. ஏற்கனவே வேலிடிட்டி நாளின் பொது ரேச்சர்ஜ் செய்தல் ஏற்கனவே மீதம் உள்ள நாட்கள் போய் விடும்.மிக ஏமாற்று வேலை இது.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
16-மே-202104:08:47 IST Report Abuse
தல புராணம் அம்பானி சொல்றான், டிராய் / மோடி அண்ணாத்தை கேக்குறார் .. நடுவுலே சாதாரண மனுஷப்பிறவிங்க நாம என்ன செய்யமுடியும்.. அம்பானி அகில அண்டத்திலேயும் பெரிய பணக்காரனாக வேண்டும்னு மோடிஜி அனுதினமும் உழைக்கிறார்.. நம்மளை மொட்டையடிச்சி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X