புதுடில்லி: புதுடில்லியில் கெரோனா தெற்று வெகுவாக குறைந்து வருவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகரிப்பதைக் கருத்தில்கொண்டு கடந்த ஏப்ரல் 19 முதல் டில்லியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கால் டில்லியில் கடந்த ஒரு வாரமாக படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கடந்த மாதம் ஏப்ரல் 21-ம் தேதி ஒருநாள் பாதிப்பு கிட்டத்தட்ட 28,395 ஆகப் பதிவாகியிருந்தது. கடந்த வாரம் கொரோனா தொற்று எண்ணிக்கை 20 ஆயிரமாகக் குறைந்தது. தற்போது கடந்த 24 மணி நேரத்தில், டில்லியில் வெறும் 6,500 மட்டுமே பதிவாகியுள்ளன. நேர்மறை விகிதம் 11 சதவீதமாகக் குறைந்துள்ளது. வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டால் வீடுகளுக்கே கொண்டு வழங்க முடிவு செய்துள்ளோம்.

ஊரடங்கால் கொரோனா தாக்கம் டில்லியில் வெகுவாக குறைந்து வருகின்றது. இருந்தும் பொது முடக்கம் மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE