பைடன் ஆலோசகராக நீரா டாண்டன் நியமனம்

Added : மே 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா டாண்டன், 50, நியமிக்கப்பட்டுள்ளார்.சட்ட வல்லுனரான நீரா தாண்டன், பில் கிளிண்டன் ஆட்சியின்போது, அமெரிக்க அரசின் கொள்கை பிரிவு துணை இயக்குனராக பணியை துவக்கினார்.அதன்பின், ஒபாமாவின் தேர்தல் பிரசார குழுவின் கொள்கை இயக்குனர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். ஒபாமாவின் காப்பீட்டு
 பைடன் ஆலோசகராக நீரா டாண்டன் நியமனம்

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா டாண்டன், 50, நியமிக்கப்பட்டுள்ளார்.சட்ட வல்லுனரான நீரா தாண்டன், பில் கிளிண்டன் ஆட்சியின்போது, அமெரிக்க அரசின் கொள்கை பிரிவு துணை இயக்குனராக பணியை துவக்கினார்.

அதன்பின், ஒபாமாவின் தேர்தல் பிரசார குழுவின் கொள்கை இயக்குனர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். ஒபாமாவின் காப்பீட்டு சட்ட கொள்கை உருவாக்கத்தில், இவருக்கு முக்கிய பங்கு உள்ளது. தற்போது அமெரிக்க மேம்பாட்டு மையத்தின் தலைவராக உள்ள நீரா டாண்டன், சமூக ஊடகங்களில் வெளிப்படையாக கருத்துகளை கூறி, அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.

இவர் சார்ந்த ஜனநாயக கட்சி எம்.பி.,க்கள் குறித்தும், கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு உள்ளார். அதனால், இரு மாதங்களுக்கு முன், அமெரிக்க வெள்ளை மாளிகையின் நிர்வாகம் மற்றும் பட்ஜெட் துறை இயக்குனராக, நீரா டாண்டன் நியமிக்கப்பட்டதற்கு, குடியரசு கட்சியினருடன், அவர் சார்ந்த ஜனநாயக கட்சி எம்.பி.,க்கள் சிலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனால் நீரா டாண்டன் பதவி ஏற்க முடியாமல் போனது. இந்நிலையில், ஜோ பைடன் தன் தலைமை ஆலோசகராக, நீரா டாண்டனை நியமித்து உள்ளார். 'அதிபருக்கு, 'டிஜிட்டல்' சேவைகள் மற்றும் அனைவருக்குமான காப்பீடு ஆகிய இரு முக்கிய துறைகளில், நீரா டாண்டன் ஆலோசனை வழங்குவார்' என, வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K S SRIDHARAN - coimbatore,இந்தியா
16-மே-202111:59:59 IST Report Abuse
K S SRIDHARAN பண்பாடு மிகுந்த நமது தேசத்தின் கலாச்சாரம் ,பண்பாடு . மிகச்சிறப்பு வாய்ந்த சம்பிரதாயங்கள் ,வாழ்வியல் நெறிமுறைகள் , பழக்க வழக்கங்கள் இறை நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் என எதிலும் திராவிடர்களுக்கு ,நம்பிக்கை இல்லை இந்து அறநிலையத் துறை எனும் பெயரில் ஒளிந்துகொண்டு। இந்துக்களின் பணத்தையும் புனிததலகளை நாசம் செய்து நாத்திகவாதி என்று கூறிக்கொள்கிறார் உலகில் பல மரபணு நிறம்.மொழி.கலாசாரம் முதலியவை சார்ந்தவர் ஒன்று சேர்ந்து மனித சமுதாயம் இந்த புவியில் பரவி உள்ளது. திராவிடர் கருப்பு இனத்தவரும் ஆரியர் பல நிறங்களின் ஒருங்கிணைப்பானவரும் இந்திய வளைகுடாவில் பல ஆயிரம் வருடங்கள் வாழ்ந்து வருகின்றனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X