கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிம்பு நடித்த 'மஹா' தடை கோரி வழக்கு

Added : மே 15, 2021
Share
Advertisement
சென்னை:நடிகர் சிம்பு நடித்த, மஹா படத்தை, ஓ.டி.டி., தளங்களில் வெளியிட தடை கோரிய வழக்கில், தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.சிம்பு, ஹன்சிகா நடிப்பில், மஹா என்ற படத்தை, 'எட்செட்ரா' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை, உபைத் ரகுமான் ஜமீல் என்பவர் இயக்கினார். இவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:விமான பணிப்பெண்ணாக நடிக்கும்
 சிம்பு நடித்த 'மஹா' தடை கோரி வழக்கு

சென்னை:நடிகர் சிம்பு நடித்த, மஹா படத்தை, ஓ.டி.டி., தளங்களில் வெளியிட தடை கோரிய வழக்கில், தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சிம்பு, ஹன்சிகா நடிப்பில், மஹா என்ற படத்தை, 'எட்செட்ரா' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை, உபைத் ரகுமான் ஜமீல் என்பவர் இயக்கினார். இவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:விமான பணிப்பெண்ணாக நடிக்கும் ஹன்சிகாவும், 'பைலட்' ஆக வரும் சிம்புவும் காதலிக்கின்றனர். அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. இந்த குழந்தை கொல்லப்படுகிறது.

கொலையாளியை கதாநாயகி கண்டுபிடிப்பது தான் கதை.இந்த கதைக்கு தேவையான காட்சிகளை எடுக்காமல், உதவி இயக்குனரை வைத்து படமாக்கி உள்ளனர். எனக்கு தெரியாமல் படத்தை 'எடிட்' செய்து, பின்னணி குரல் பதிவு செய்து வெளியிட முயற்சிக்கின்றனர். எனக்கு 24 லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாக கூறி, 8.15 லட்சம் ரூபாய் தான் தந்தனர். சம்பள பாக்கியை தரும்படி தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்.

எனக்கு தெரியாமல் கதையை சிதைத்து, வேறு சிலரை வைத்து படத்தை முடித்ததற்காக, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். படத்தை ஓ.டி.டி., தளங்களில் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.மனு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தயாரிப்பு நிறுவனம், உதவி இயக்குனர் மற்றும் படத் தொகுப்பாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை, 19ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X